பக்கம்:சாமியாடிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

105


தாமோதரன், வேறு யாரையோ சொல்வது மாதிரியும், அதுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் துளசிங்கமும், திருமலையும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நிற்கிறார்கள். மற்போரைச் சொற்போராக்குகிறார்கள். திருமலையின் காதில் ரத்தம் ஒழுகியது, துளசிங்கம் கடித்த கடி. ரத்தச் சொட்டுக்களோடு பேசினான்.

"செறுக்கி மவன். சிமெண்ட் கேட்டா தர மாட்டாங்கான். எனக்கு இப்போ ரெண்டு மூட்ட சிமெண்ட் வேணும். வாங்காமப் போக மாட்டேன். செறுக்கி மவன் சரியான நாயி... எப்டி கடிச்சிருக்கான் பாருங்க.."

திருமலை கொடுத்த அடியில், கை வளைத்து நின்ற துளசிங்கம், வளையாத வலது கையை ஆட்டியபடியே பதிலளித்தான்.

"நான் நாயின்னா இவன் வெட்டியான். என் கைய எப்டி வளச்சிருக்கான் பாருங்க. சிமெண்ட் அவனுக்கு இனிமேல் எப்பவும் கிடையாது. வேணுமுன்னால் புகார் பண்ணிக்கட்டும்."

இதற்குள் ஊரே கூடிவிட்டது. பாக்கியம், திருமலை காதில் பெருக்கெடுத்த ரத்தத்தை முந்தானை சேலையால் துடைத்தபடியே ஒப்பாரியிட்டாள். கோலவடிவு, அம்மாவுக்கும் தாயம்மாவுக்கும் பின்னால் நின்று கைகளைப் பிசைந்தாள். ரஞ்சிதம் நெற்றிச் சுருக்கங் களோடு நின்றாள். சந்திரா, துளசிங்கத்தை நாயே, பேயே என்று திட்ட, துளசிங்கத்தின் அம்மா அன்னம்மா எதிர்திட்டு போட்டாள். அலங்காரி, துளசிங்கத்தின் கையைத் தடவிவிட்டபடியே, "என் ராசா ராசா” என்று கத்தினாள். இதற்குள் கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் அணிவகுத்தும் ஆர்ப்பரித்தும் பேசினார்கள்.

"சிமெண்ட் வாங்க விடமாட்டோம்."

"தராத சிமெண்ட் எடுக்காம விடமாட்டோம்."

"செம்பட்டையான் கடைக்குள்ள வந்து சிமெண்ட் எடுக்கணு முன்னால் அந்தக் கடையே கரும்பட்டையான்களுக்கு சமாதியாயிடும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/107&oldid=1243563" இலிருந்து மீள்விக்கப்பட்டது