பக்கம்:சாமியாடிகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

111

அடடே. ராமய்யா மாமா. கிணத்து மேட்டுல ஒரு ரோசாச் செடி இருக்கே. நாலைஞ்சு பூ இருக்கே. தலையில வச்சால் எப்டி இருக்கும். யாரும் எப்படியும் போவட்டும். நாம் 'பூப்பறிக்கத்தானே போறோம்."

கோலவடிவு நடக்க முடியாதவள் போல் நடந்தாள். தன்னை நம்ப முடியாதவள் போல் நடை போட்டாள். ஒத்தைப் பரப்பில், கைகளை அங்குமிங்குமாய் ஆட்டி, சர்க்கஸ்காரி போல் நிதானமாய் நடந்து, ராமையா மாமாவின் வயலுக்கு வந்துவிட்டாள். அக்கினி ராசா பராக்குப் பார்த்துட்டு இருந்தான். துளசிங்கமும், ராமையாவும், காரசாரமாகப் பேசினார்கள். அக்கினி ராசா, அவளைப் பார்த்தான். என்னம்மான்னு கேட்க திராணி இல்லை. அப்பா முகத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

கோலவடிவுே அவர்கள் கவனத்தைக் கலைத்தாள்.

"மாமா. இந்த ரோசாப் பூவை நான் பறிச்சுக்கட்டுமா..? நல்ல

so

.... "ریا

துளசிங்கத்திடம் வாயெல்லாம் பல்லாகக் கடித்துக் குத்திப் பேசிய ராமையாவுக்குக் கோலவடிவைக் கண்டதும், பல்லெல்லாம் வாயாகிவிட்டது. பய மவளுக்கும் அக்கினி ராசாவக் கட்டிக்க ஆசதான். இவள் சம்மதிக்காம கல்யாணம் நடக்காதேன்னு இனுமப் பயப்படவேண்டாம்.

ராமையா, அவளை மகளைப் பாாப்பதுபோல் பார்த்துத் தந்தை போல் பேசினார்.

"ஒனக்குல்லாத பூவாம்மா. நீ பறிக்காத முள்ளு குத்தும். ஏல அக்கினி ராசா. வேட்டிய எடுத்து கால் வரைக்கும் இழுத்துப் போடுல. மூதேவி. மாமா மவளுக்கு பூப்பறிச்சுக் கொடுடா. எல்லாப் பூவையும் பறிச்சுக் கொடுடா."

அக்கினி ராசாவுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அவனுக்கும் இந்தக் கல்யாணப் பேச்சு தெரிந்திருக்க வேண்டும். அவளை ஆவலோடு பார்த்தான். அனுமான் சஞ்சீவி மலையத் தூக்கியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/113&oldid=1243570" இலிருந்து மீள்விக்கப்பட்டது