பக்கம்:சாமியாடிகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

113

அக்கினி, ஆமாம் என்பதுபோல் தலையாட்டினான். உடனே, துளசிங்கம், "ஒம்ம மகன் கிட்டயே விசாரியும்" என்றபோது, அப்பா கேட்டால் மட்டுமே பேசும் அக்கினி பேசாமல் இருந்தான்.

"துளசிங்கம் சொல்லுறது நிசமாடா..."

"ஆமா. பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட போடாட்டா பயிரு பொண்ணு மாதிரி வளரும். ஆனால் சமையாது. அதாவது வயசுக்கு வராதுன்னு துளசி சொன்னது வாஸ்தவந்தான். நான் ஒம்ம கிட்ட சொல்லல. செலவாகுமேன்னு."

"போயும் போயும் எனக்கு வந்து மகனா வாய்ச்சே பாரு. நீயுல்லாம் ஒரு சம்சாரியா. செலவாகுமுன்னா நெனச்சே? வயல நட்டால் செலவாகும். நடாமல் இருப்பமோ. பம்பு செட் போட்டா கரெண்ட் செலவாகும். போடாம வைப்பமா. பூச்சி மருந்தடிச்சா செலவாவும். அடிக்காம இருப்பமா. நீயுல்லாம் ஒரு விவசாயியாக்கும். ஏடே துளசிங்கம். ஒன்ன நான் திட்டுவது தப்புத்தான் முட்டாத் தனந்தான். தப்பா எடுத்துக்காதடே."

"தலையை வெட்டிட்டு தப்புன்னு சொல்லும். எனக்குத் தெரியும். நீங்க எல்லாரும் என்னை இப்டி கரிச்சுச் கொட்டுவியங்கன்னு. பண்டாரம் பரதேசியாய் போனவன். அதுவும் உப்புக்கும் உதவாத எலி டாக்டர் மகன். நல்லா சம்பாதிக்கானேன்னு பொறாம. ஆனால் ஒண்ணு சொல்லுறேன். இந்த ஊரே சேர்ந்தாலும் என்னை துரத்த முடியாது. ஒங்களால மிரட்ட முடியும். ஆனால் விரட்ட முடியாது."

துளசிங்கம், போகப் போகிறவன்போல், செருப்பு போடப் போனான். அதைப் பார்த்த கோலவடிவு, ராமையா மாமா வயல் வழியாகச் சின்ன வாய்க்கால் வரப்பில் நடந்தாள். ராமையா, அக்கினி ராசாவை அடித்திருப்பார். பிறகு மருமகள் கோலவடிவுக்கும் அந்தப் பழக்கம் வந்துவிடக்கூடாதே என்று பல்லை மட்டும் கடித்தார். துளசிங்கத்திடம், "வைக்கோலாவது வருமா. அதை மாட்டுக்குப் போடலாமா” என்று கேட்கப் போனவர், மருமகளுக்குக் கேட்கும்படியாய் அவன் இன்னும் ஏடா கோடமாய் பேசிவிடப் படாதே என்று பயந்து போனார்.

8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/115&oldid=1243573" இலிருந்து மீள்விக்கப்பட்டது