பக்கம்:சாமியாடிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

115

அவனையே பார்த்து நின்ற கோலவடிவிற்கு விக்கல் வந்தது. அது விம்மலாகியது. வெடிச் சத்தமாகியது. கசிவாகியது. கண்ணிராகியது.

'கை ஒடிஞ்சுட்டாமே. ஒடிஞ்சுட்டாமே. என் மனசு அவருக்குப் புளியலியே. நான் எப்பவும் நல்ல பொண்ணுதான். அவருகிட்ட யார் சொல்லுறது. நாம் சொல்ல முடியாது. அப்படியே சொல்லத் தயாராய் இருக்கதுக்கு அவரு கேட்கத் தயாராய் இல்ல. அத்தே. அலங்காரி அத்தை. எங்கத்தே போயிட்டே. எப்பத்தே வருவே.

கோலவடிவு குளத்துக்கரை வழியாக நடந்தாள். போனவாரம் அவன் வைத்த குங்குமம் கலையப்படாமல் ஆனந்த அதிர்ச்சியுடன் போன அதே கரையில், தள்ளாடித் தள்ளாடி தானாய் நடக்காமல் யாரோ நடத்துவதுபோல் நடந்தாள்.

எப்படித்தான் வீட்டுக்கு வந்தாளோ. வழியறியாமலே, பழக்கப் பட்ட காரணத்தால் வந்துவிட்டாள். தெரு வாசல் கதவை திறந்துவிட்டு, நுழையப் போனாள். அப்பா ஏன் சித்தப்பா கிட்டே இப்படிக் கத்துறார்.

"அதெப்டிடா. அக்கினி ராசாவோட கோலவடிவு. நெனச்சுக் கூடப் பாக்க முடியாதுப்பா..."

"ஏன் முடியாது. திருமலைக்கும் துளசிங்கம் செறுக்கி மவனுக்கும் நடந்த சண்டையில, ராமையா மச்சான் நம்ம பக்கம் நின்னாரு. இதனாலதான் துளசிங்கம் பயலும் இறங்கி வந்தான். அதோட காத்துக் கருப்பன் குடும்பம் நம்ம அம்மா பிறந்த குடும்பம். ஆள்பலம் உள்ள குடும்பம்."

"சரி யோசிக்கேன். யோசிக்கேன்."

"யோசிக்க யோசிக்க கோலவடிவுதான் கொடுத்து வச்சவள்னு

y?

வரும்.

அப்பாவின் முதலாவது பதிலில் முழு வெற்றி கண்டவள்போல் நிமிர்ந்த கோலவடிவு, அவரது இரண்டாவது பதிலில் துவண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/117&oldid=1243576" இலிருந்து மீள்விக்கப்பட்டது