பக்கம்:சாமியாடிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

117

"ஊர்ல எவளப் பார்த்தாலும், எவனப் பார்த்தாலும் அக்னி ராசாவுக்கும், கோலவடிவுக்கும் கல்யாணமாமே கல்யானமாமேன்னு கேள்விமேல் கேள்வியாய் கேக்காங்க... எனக்கு பதில் சொல்லமுடியல. இந்தப் பேச்சு எப்படி வந்தது."

"இதுவே ஒரு நல்ல சகுனமுன்னு நெனச்சுக்கணும். மயினி.”

"சகுனம். நல்ல சகுனம். பூனய மடில வச்சுப் பார்த்த சகுனம். அதுவும் நாம தீர்மானம் செய்யுறதுக்கு முன்னாலயே ஊர் தீர்மானம் பண்ணுது. ஒம்மத்தான். திருமலை ஏதோ ஒங்க கிட்ட பேசனுமாம். நீயே சொல்லேண்டா..."

கோலவடிவுக்கு, போய்ப் போய் வந்த உயிர், இப்போது போகாமலேயே அவள் உடலில் முழுமையாக நின்றது. அண்ணா. நமக்காக அப்பாகிட்ட சண்டை போடப் போறான். அவன் போடுற சத்தத்துல. இந்த செத்த பேச்சு இன்னயோட முடியனும்.

கோலவடிவு வீட்டுக்குள் நுழைந்தாள். இருபது எட்டுக்கள் போட்டு நடக்க வேண்டிய தூரத்தைப் பத்தே எட்டாகத் தாவி, தனக்கு எதுவுமே தெரியாததுபோல, குறுக்காகக் கட்டிய கொடியில் சேலையைப் பரப்பிப் போட்டபடியே, அண்ணா திருமலையைப் பட்டும், படாமலும் பார்த்தாள். சீக்கிரம் பேசு அண்ணா. அப்பாகிட்ட பேச பயந்தான் வரும். அதுக்காவ இப்படியா யோசிக்கது. பேசுண்ணா. பேசு. அக்னிராசா, அருமத் தங்கைக்கு ஆவாதுன்னு அடிச்சுப் பேசு. நீ முடிக்குமுன்ன கல்யாணமே நடந்துரும் போலுக்கே...'

அப்பாவை நேருக்கு நேராய்ப் பார்க்கப் பயந்தது போல, அம்மாவைப் பார்த்து அவள் வழியாகத் தன்னைப் பார்த்த மகன் திருமலையை நோட்டம் விட்டார். பிறகு, இருவரும் 'அம்மா' வழியாகவே மகனைப் பார்த்துவிட்டு, மனைவியிடம் கேட்பதுபோல் மகனிடம் கேட்டார். அவன் காதில் கடுக்கன் மாதிரி போடப்பட்ட பிளாஸ்டரைப் பார்த்ததும் கோபம் வந்தது.

"என்ன சொல்லப் போறானாம். அம்மன் கொடை விஷயத்துல சினிமாப்படம் போடணும்னு சொல்லப் போறானா. இல்ல காத கடிக்க கொடுத்தது மாதிரி மூக்கையும் கொடுக்கப் போறானாமா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/119&oldid=1243580" இலிருந்து மீள்விக்கப்பட்டது