பக்கம்:சாமியாடிகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



12

கோலவடிவுக்கு, அந்த திண்டாட்டத்திலும், ஒரு கொண்டாட்டம்,

சொக்காரன்மார், உட்காருவதற்கு முன்பே கோலவடிவு வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டாள். அந்தக் குழப்பத்திலும் சிறிது தெளிவு ஏற்பட்டது. வழியில் அலங்காரியைப் பார்க்கலாம், அல்லது அவள் மச்சான் மகனைப் பார்க்கலாம் என்ற மனவோட்டத்தோடு உடலோட்டமாய் ஓடினாள். ஆனாலும் அவர்களை கடைகள் பக்கம் காணோம். பீடிக்கடைப் பக்கம் பேச்சில்லை. குளத்துக்கரையில் அலங்காரி இல்லாத பெண்கள் கூட்டமும், துளசிங்கம் இல்லாத ஆண் கூட்டமுமாகப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன.

வயலுக்குள் வந்த கோலம், பம்ப்செட்டை நிறுத்தாமல் வெள்ளப்பெருக்காகிக் கரையுடைந்த வாய்க்காலையும், எல்லைபோய் இரண்டறக் கலந்த சின்னச் சின்ன மிளகாய் பாத்திகளையும் வாயகலப் பார்த்தாள். பின்னர் பம்ப்செட் வெள்ளத்தை உற்றுப் பார்த்தாள். இதோ இந்த பம்ப் செட் மேளதாளத்தோடு, அலங்காரி அத்தையின் குலவையோடு, அதோ அந்த குருவிகள் கெட்டி மேளம், கெட்டி மேளம்' என்று கூறுவது போல் கூவிய காச்சா மூச்சா சத்தத்தோடு இவற்றின் சகல சாட்சியங்களுடனும் துளசிங்கம் மச்சான் குங்குமம் வைத்தார். சைபர் மாதிரியான பெயிலு குங்குமம் அல்ல. தடிச்ச குங்குமம்.

கோலவடிவு, சுயநினைவுக்கு வந்து, பம்ப் செட்டை 'ஆப்' செய்துவிட்டு, எதிர்த்திசையை எதோ ஒரு திசையாக நினைத்து நோக்கினாள். அங்கே உத்தமன் அக்னி ராசா. தான் சரியாகக் கிரகிக்காததாலோ, அல்லது துளசிங்கம் சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லாததாலோ, சாவியாகிப்போன நெற்பயிர்களை வட்டமடித்த காகங்களை விரட்டியடித்து காவல் காத்தான். அவன் ஒரு பொருட்டல்ல என்பதுபோல் அந்தப் பறவைகளோ பயப்படவில்லை. அக்னிராசா கோலவடிவின் கவனத்தைக் கவர "ஏய் காக்கா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/125&oldid=1243592" இலிருந்து மீள்விக்கப்பட்டது