பக்கம்:சாமியாடிகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

129

சாமியாடிகள் 129

எழுந்தாள். கண்ணிர் சொட்டுக்கள் கழுத்தில் பெருக்கெடுத்தன. அலங்காரி அவள் கண்களை முந்தானையால் துடைத்து விட்டுப் பெருமூச்சோடு பேசினாள்.

"ஒன் கதயத்தான் இவன் கிட்ட சொல்லிட்டு. இருந்தேன். துடிச்சுட்டான். துடிச்சுட்டான். அப்படித் துடிச்சுட்டான். ஏய் துளசிங்கம். என் மவனே. கோலம் நம்ம பொண்ணுடா. அலங் கோலமாய் ஆயிடப்படாதுடா. அவள எப்படியும் காப்பாத்தி ஆகணும். எம்மாடி எனக்கு தலைக்கு மேலே வேல. நம்ம கடலமாடன் ஆட்டுக்கு தவிடு வச்சுட்டு வாறேன்." -

கடலை மாடனுக்கு வரியோடும் நாளிலேயே கோலவடிவை தன்னிடம் வரவழைத்த மாடனின் திருவிளையாடலில் மெய் சிலிர்த்து அலங்காரி போய்விட்டாள். துளசிங்கம், இடுப்புப் பெல்ட்டைத் தடவியபடியே கோலவடிவைப் பார்த்தான். இருவரும் சிறிது நேரம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். நேரமில்லாத துளசிங்கம் நேரடியாகவே உறுதி சொன்னான். சித்தி பூடகமாகப் பேசுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்ற அர்த்தத்தில் பேசினான்.

"கவலைப்படாதே கோலம். அந்த அக்னிப் பயல் ஒன்னை எரிக்காம நான் பாத்துக்கிறேன். அழாதேம்மா. வேற எந்த வழியும் இல்லாட்டா நானே ஒன் கழுத்துல தாலி போடுறேன். பயப்படாதே. ஒங்கப்பா சம்மதத்தோடுதான்."

கோலவடிவு புல்லரித்தாள். அவன் சொன்ன காட்சியை நினைக்க நினைக்கக் கன்னம் சிவந்தது. அண்ணாவோட ஏற்பட்ட அமளி துளியில், இவனால் அப்டி செய்ய முடியுமா என்று அவனை ஏக்கமாய்ப் பார்த்தாள். பிறகு, அவனால் முடியும் என்றும், அதற்குரிய சாதுரியமும், சமர்த்தும் அவனிடம் இருப்பதைக் கண்டு கொண்டவள் போலவும் அவனைச் சிரிப்பும் சிணுங்கலுமாய்ப் பார்த்தாள். அப்பா அவனுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்தது அவள் முகத்தில் நல்ல சிவப்பாக மலர்ந்தது.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/131&oldid=1243598" இலிருந்து மீள்விக்கப்பட்டது