பக்கம்:சாமியாடிகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சு. சமுத்திரம்

130 சு. சமுத்திரம்

துளசிங்கம் அவள் மோவாயை, ஒரு கையாலேயே நிமிர்த்தினான்

எந்த நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்தானோ, அதை

எச்சிலாக்கியபடியே உறுதியளித்தான்.

"இந்த முத்த சாட்சியாய் சொல்லுறேன். இந்த துளசிங்கம் ஒன்னைக் கைவிடமாட்டான்."

அந்த அறைக்கு வெளியே, அலங்காரி கடலைமாடன் கிடாவோடு விளையாடி விளையாடிப் பாடினாள்.

"துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி

என்கிட்ட இருக்குது. சூரிக்குத்தி."

13

கரும்பட்டையான் கூட்டத்தின் காளியம்மன் வரி விதிப்பு சட்டுப்புன்னு முடிந்துவிட்டது. ஆனால், செம்பட்டையான் கூட்டத்தின் வளி விதிப்பு ரப்பர் மாதிரி இழுத்தது. முதலில் கூட்டத்தை எங்கே நடத்துவது என்று பிரச்சினை மேலாவாரியாக எழுந்தது. காஞ்சான் வழக்கம்போல் தன் வீட்டில்தான் நடத்தவேண்டும் என்றார். ஆனால், துளசிங்கம் தலையெடுத்து விட்டதால் அவன் தந்தை எலி டாக்டர்' தனது வீட்டில் வைக்க வேண்டும் என்றார். இறுதியில் இவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் கூடிவிட்டார்கள். சொல்லி வைத்தது போல், கிழவர்கள் ஒருபக்கமாகவும், வாலிபர்கள் ஒரு பக்கமாகவும் உட்கார்ந்தார்கள். இந்தத் தடவை கரும்பட்டையான் காளியம்மனுக்கு, இந்தச் செம்பட்டையான் சுட்லை மாடனைப் போட்டியாக்குவது என்று தீர்மானமாகிவிட்டதால், அந்தக் குடும்பத்துப் பெண்கள் கூட்டத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/132&oldid=1243599" இலிருந்து மீள்விக்கப்பட்டது