பக்கம்:சாமியாடிகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சு. சமுத்திரம்

132 சு. சமுத்திரம்

"என் தாய் மாமனுக்கும் எனக்கும் எழவு எட்டு கிடையாதுன்னு ஒங்களுக்குத் தெரியாதா..?"

"ஒரு வேள இந்தச் சாக்குல. சேரப் பாக்கியோ என்னவோ..?"

"பரம்பரையாய் அவங்கதான் முதல் வெள்ளில கொடுக்காங்க. நாம் அந்தக் கோவிலுல போயி மாலை எடுத்துப் போடுறவங்க. அவங்க நம்ம கோயிலுல வந்து உத்தரவு கேட்கிறவங்க... வேண்டாங்கல. ஆனால் ஒரு வார்த்த அவங்ககிட்ட கேட்டுக்கிட்டு."

"நீ வேணுமுன்னா அவங்க காலுல போயி முட்டு. நாங்க போகப் போறதுல்ல." -

காஞ்சானைத் தொலைவில் நின்ற அலங்காரி, முகத்தைச் கண்டிச் சுண்டிக் கைகளை மேலே மேலே தூக்கி தூக்கித் தூண்டிவிட்டாள். அவர் விடுவாரா.

"பரம்பரையாய் பழக்கம் என்கிற கரும்பட்டையான் பருப்பு, செம்பட்டையான் அடுப்புல, இனிமேல் வேகாது. அவங்கள இப்டி விட்டதாலதான் நம்பள இளப்பமாய் நினைக்காங்க. அவங்க கண்ணுக்கு பழனிச்சாமிதான் ஒரே ஒரு பெரிய மனுஷன். நானோ. துளசிங்கம் அப்பாவோ வெறும் மனுஷனாக்கூடத் தெரியல. எவ்வளவு திமுரு இருந்தா நம்ம துளசிங்கம் பய கடைக்குள்ள வந்து அந்தத் திருமலைப் பயல். அடிப்பான். எவ்வளவு திமுரு இருந்தால் நம்ம அலங்காரிய.”

"ஏய் யார் பேச்ச பேசுனாலும் அலங்காரி பெரியம்மா பேச்சு எடுக்கப்படாது.”

எல்லாரும் எதிர்பாராத வகையில், அலங்காரி அங்கே ஓடிவந்தாள். சில பெண்கள், அவள் சேலையைப் பிடித்து இழுத்தும், அவள் அதை விட்டுவிட்டு வரத் தயாரானவள் போல் முண்டியடித்தாள். கடைசியில், அந்தப் பெண்கள் தான் கூச்சப்பட்டு, பிடித்த சேலையை ஒடிப்போய் அவள் தோளில் தொங்கப் போட்டார்கள்.

அலங்காளி, சபைக்கு முன்னால் வந்து கத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/134&oldid=1243601" இலிருந்து மீள்விக்கப்பட்டது