பக்கம்:சாமியாடிகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

133

சாமியாடிகள் 133

"என்ன அலங்காரி பேச்சு பேசப்படாதா. பெறவு எதுக்குல பெரியம்மான்னு சொல்லுத...? அதுக்குப் பதிலா. வேற வார்த்தய போட்டா என்னடா. பேசிதியளோ பேச்சு செத்த பேச்சு. இது கெளரவ சபையா. இல்ல செம்பட்டையான் சபையா. எனக்கு இப்போ தெரியணும்."

"என்ன அலங்காரி. இந்தச் சமயத்தில."

"பின்ன என்ன மச்சான். கெளரவ சபையில திரெளபதிய துச்சாதனப்பய துகிலுரிஞ்சது மாதிரி. பழனிச்சாமி வீட்ல என்னை அருணாசலம் அப்டி மான அவமானமாப் பேசிட்டான். காஞ்சான் மச்சான பயல்னு வேற திட்டுனாள். அந்த பேச்சி. துளசிங்கம் கடையில வந்து அடிச்சுட்டுப் போறான் திருமல."

"எம்மா. இது ஆம்புள விவகாரம். நீ போ. பொம்புளக்கி வேல இல்ல."

"ஆம்புளைவ பொம்பளையா மாறிட்டா. பொம்புளயவ ஆம்புளயா மாறித்தானே ஆவணும்...? எங்களுக்கு அதான் ஒங்க குடும்பத்து பொம்புளயளுக்கு. இங்க கூடியிருக்கிற செம்பட்டையான். ஆம்புள மார்ல எத்தனை பேரு கரும்பட்டையான் பயலுவ காலக் கழுவப் போறியள்னு தெரியும்."

எலி டாக்டர், கண்ணைச் சிமிட்டியபடியே எச்சரித்தார்.

"அலங்காரி. ஒனக்கு அபராதம் போட வேண்டியது வரும்."

"அப்படின்னா. அதையும் நீருதான் கட்டவேண்டியதிருக்கும். எங்க வீட்டு மம்மத ராசாவோட கூடப் பிறந்த அண்ணாச்சியாச்சே.

"போம்மா போம்மா. ஏல. பேய்ப் பய மவனுளா. லேசா சிரிங்கல. குடலு அறுந்துடப் போவுது."

துளசிங்கம் எழுந்தான். அப்பாவை ஒரு முறைப்பு முறைத்து, அவரை கப்சிப்பாக்கி விட்டுப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/135&oldid=1243602" இலிருந்து மீள்விக்கப்பட்டது