பக்கம்:சாமியாடிகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

135

சாமியாடிகள் 135

"இப்பவே சொல்லிட்டேன். வீடியோ சினிமாப்படம் போடப் போறோம்."

"திருவிளையாடலா. சம்பூர்ண ராமாயணமா. ரெண்டுல எதுன்னாலும் சரிதான்."

“ரெண்டும் இல்ல. ஒரு இங்லிஸ் சண்டைப்படம். ஒரு தமிழ் காதல் படம்."

"கட்டணம் வசூலிக்காட்டா சரிதான்."

"அப்புறம் வில்லு, பொம்பள வில்லுதான். சர்க்கரைப் பட்டி சடையம்மாவோட வில்லு."

"எல்லாத்தையும் நீயே தீர்மானம் பண்ணிட்டே. நீயும் யாரு. நம்ம பயதானே. சம்மதிக்கோம். சம்மதிக்கோம்."

"நீங்க சம்மதிப்பிங்கன்னு எனக்குத் தெரியும். எதுக்கு சொல்ல வந்தேன்னா. நம்ம சுடலைமாடன் கோவிலுல இருபத்தோரு சாமிங்க. எக்ஸ்டிராவா ஒருத்தர சேர்த்து இருபத்திரண்டு பேரு சாமியாடுறாங்க. இவங்கெல்லாம் அளவோட ஆடணும்."

"என்னப்பா. நீ குடும்பக் கட்டுப்பாடு கூட்டத்துல பேசுறது மாதிரி பேசுற. சாமிகள பழிக்கப்படாது."

"நான் சாமிகளப் பேசல. சாமியாடிகளத்தான் பேசுறேன். சாமியாடுற எங்கப்பாவையும் இந்த சின்னய்யாவயும் சேர்த்துத்தான். சொல்லுறேன். தண்ணி போட்டுட்டு யாரும் சாமியாடப்படாது. அப்படி ஆடுனா இளவட்டங்க கோயில் பந்தலுலயே கட்டி வச்சுடுவோம்."

"பட்டை தீட்டும்" சாமியாடி ரத்தினம் உரிமைக்குரல் எழுப்பினார். "ஒன் வயசுக்குத் தக்கபடி பேசு துளசிங்கம்."

"துளசிங்கம் சொன்னதுல என்னப்பா தப்பு. சாமியாடுற நாளுலயாவது குடிக்காம இரேன். போன வருஷம் குடிச்சுப்புட்டு. மகளேன்னு சொல்லுறதுக்குப் பதிலா மயினின்னு பேசுற மாடனுக்கு ாாமாக்கா எப்படி மயினி ஆனாள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/137&oldid=1243604" இலிருந்து மீள்விக்கப்பட்டது