பக்கம்:சாமியாடிகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

சு. சமுத்திரம்

#36 சு. சமுத்திரம்

"சரி. சபை முடியலாமா..? ரெண்டு நாளையில் வரிப் பணத்த எல்லாரும் கொடுத்துடனும்."

எல்லோரும் எழப்போனபோது, பத்துப் பதினைந்து பேர் சுற்றி வந்து நின்றார்கள். அத்தனைபேரும் கரும்பட்டையான் குடும்பத்தினர். இவர்கள் வரவை எதிர்பாராத காஞ்சான் கத்தினார்.

"என்னப்பா இது. அடிக்க வாரது மாதிரி வந்திருக்கிய." வந்தவர்களில் முக்கியமான, ஒருவர் மரியாதையுடன் பேசலானார்.

"நாம எதுக்கு மச்சான் அடுச்சுக்கணும். நீங்களும் வரி போடுறதா கேள்விப்பட்டோம்."

"ஆமா.. அதுக்கென்ன இப்போ..?” "வருஷா வருஷம் நாங்கதான்." “ஒங்களுக்கு இந்த 'நான் என்கிற அகங்காரம் வரப்படாதுன்னுதான் அடுத்த வெள்ளில கொடை கொடுக்கப் போறோம்."

"அடுத்த வருஷம் நீங்க மொதல்ல கொடுங்க. நாங்களே விட்டுக் கொடுக்கோம். இந்த வருஷம் வரி போட்டுட்டோம்."

"நாங்களுந்தான் போட்டுட்டோம்." "இப்படி விதண்டாவாதமா பேசுனா எப்படி..?" "கரும்பட்டையான் பேசுனால் வாதம். அதையே நாங்க பேசுனா. விதண்டாவாதம். அடுத்த வருஷம் நாங்க விட்டுக் கொடுக்கோம். இந்த வருஷம் நாங்கதான் நடத்தப் போறோம்."

கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த நாட்டு வக்கீல்' நாராயணன், கெஞ்சாமலும் அதேசமயம் மிஞ்சாமலும் பேசினான். நாட்டு வக்கீல் என்று பெயர் எடுத்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/138&oldid=1243605" இலிருந்து மீள்விக்கப்பட்டது