பக்கம்:சாமியாடிகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

137

சாமியாடிகள் 137

"கோயில் முறைன்னு ஒண்ணு இருக்கே. காளி, மாடனோட தாய். வருஷா வருஷம் ஒங்க மாடன் எங்க காளிகிட்ட வந்து விபூதி பூசிட்டுப் போய்த்தான் ஆடுறது வழக்கம்."

"இந்த வருஷம் எங்க மாடன் ஒங்க காளிகிட்ட விபூதி வாங்க மாட்டான்.”

"சரி வாங்கட்டும். வாங்காமப் போகட்டும். இனிமேல் வருஷா வருஷம் மாறி மாறி காளிக்கும், மாடனுக்கும் கொடை கொடுத்துடுவோம். இந்த வருஷம் காளிக்கே முதல் கொடையா இருக்கட்டுமுன்னு எங்க பழனிச்சாமி அண்ணாச்சி ஒங்ககிட்டே சொல்லச் சொன்னாரு..."

கோலவடிவின் சிநேகிதத்தால், அடுத்தவர்கள் பதிலளிக்கட்டும் என்று தன்பாட்டுக்கு இருந்த துளசிங்கம், அந்தப் பக்கமாக வந்த திருமலையைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான். புதிய உறவு பழைய பகையானது. அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.

"ஏன் பழனிச்சாமி எங்ககிட்ட வந்து கேட்க மாட்டாரோ..? அவரு பெரிய மனுஷனா இருந்தால் அவரு வீட்டு வரைக்குந்தான்."

திருமலைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.

"ஏல. செறுக்கிமவனே. யார்ல பழனிச்சாமி. பேர் சொல்லிக் கூப்புடுற அளவுக்கு வந்துட்டியா..?"

"பழனிச்சாமி. பழனிச்சாமி. என்னல செய்வே.?"

"இப்போ ஒன்னையும் ஒன் சொக்காரனையும். என்ன செய்யப் போறேமுன்னு பாரு..."

"வீடு விட்டு வீடா அடிக்க வந்திருக்கிய. ஏல. நீங்கல்லாம் நிசமான செம்பட்டையான்னா எடுங்கல. அரிவாள. கையில். அது இல்லாட்டா. கல்ல எடுங்கல."

கரும்பட்டையான்களும், செம்பட்டையான்களும் வீரத் தனத்திலும், பேடித்தனத்திலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/139&oldid=1243606" இலிருந்து மீள்விக்கப்பட்டது