பக்கம்:சாமியாடிகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

139

சாமியாடிகள் 139

"சரி. தெரியாம வந்தோமுன்னு மன்னிப்புக் கேட்டுட்டு மரியாதியா போங்க."

"ஒத்தைக்கு ஒத்த வாடா..."

"வருவேன். ஆனால் நான் எட்டுபேர ஒரே சமயத்துல சமாளிக்கிறவன். ஒன்ன மட்டும் கவனிச்சுட்டு எழுபேர விடுறதுக்கு தயாராய் இல்லல."

செம்பட்டையான்களும், கரும்பட்டையான்களும் இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கைகலப்பு இல்லாமல் வாயாடுவார்களா என்று ஒரு சந்தேகம் வருவது இயற்கைதான். அது அந்த ஊர், மண்வாகு என்பது மட்டுமல்ல, துளசிங்கம் திருமலை தவிர, எவனும் எவனுடனும் தனிப்பட்ட முறையில் மோதவில்லை. ஒருவேளை இந்தச் சூழலே இன்னும் கொஞ்சம் நேரம் நீடித்து இருதரப்பில் யாராவது ஒருவர்மீது ஒருவர் கையோ, காலோ தற்செயலாகப் பட்டால், அது கொலைகளில் கொண்டு போய் விடலாம். அத்தகைய சந்தப்பங்களில் கூட்டம் கும்பலாகிவிடும். ஒரு கூட்டம் ஒரே மனிதன்போல் உணர்ச்சி வசப்படும்போது அதற்குப் பெயர் கும்பல். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாமன் மச்சானை வெட்டுவான். மச்சான் மயினிைையத் துகிலுரிவான்.

செம்பட்டையான், இளக்காரமாய்ப் பேசப் பேச, கரும்பட்டையான் வம்சத்துக் கூட்டம் கும்பலாகிக் கொண்டிருந்தது. தற்காப்பிற்காவது தாக்கியாக வேண்டும் என்று திருமலையும், அவன் சிற்றப்பாவும், வேட்டிகளைத் தார்ப்பாய்ந்தபோது

அலங்காரி ஒடி வந்தாள். கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டபடியே கூக்குரலிட்டாள்.

"ஏய்யா. நாம் இன்னையோட இருந்து இன்னையோட போற அந்நியம் இல்ல. அன்னியோன்னியமா இருக்கவங்க. நாளைக்கு ஒருத்தர் முகத்துல ஒருத்தர் விழிச்சாகணும். சுடலைக்கும். காளிக்கும். பலி கொடுக்க ஆடு இருக்கு. கோழி இருக்கு. மனுஷங்க வேண்டாய்யா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/141&oldid=1243649" இலிருந்து மீள்விக்கப்பட்டது