பக்கம்:சாமியாடிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

141

சாமியாடிகள் 141

"நீ பொதுப்பிள்ள. நீ சொன்ன பிறவும் கேட்காம இருப்பமா? ஏல துளசிங்கம். இங்க வாடா. மாரியப்பா தள்ளிப் போ.. எல கவுகண்ணா... ஒனக்கு தனியா வெத்துல பாக்கு வச்சு சொல்லணுமா..? சரி. பற்குணம். உட்காரு. விஷயத்த இப்பவே பேசித் தீர்த்துடலாம். பழனிச்சாமி. மச்சான கூப்பிடுவோமா..."

"எங்கப்பா கூப்பிட்டாலும் வரமாட்டாரு..."

"எங்க துளசிங்கத்தையும் ஒங்க திருமலையையும் ஊரவிட்டே துரத்திட்டா ஊர்ல பேசுறதுக்கு எந்த விவகாரமும் இருக்காது.”

காஞ்சான் பேசப் பேச, எலி டாக்டர் அவரை விலாவில் இடித்தார். ஒருவேளை, அந்தக் குடும்பத்தில் தனக்கு உள்ள இரண்டாவது பெரிய மனுஷத்தனத்தை என் மகன் துளசிங்கம் பறிச்சுடுவான்னு பயப்படுதானா. கழுத களவாணிப் பயல். தீப்பிடிச்ச பங்காளி வீட்டை அணைக்காம அவன் காலையே கட்டிப் பிடிச்சு அழுத பயல் மாதுரில்லா அழுவுறான். இந்த எலியன். எலி டாக்டர், காஞ்சான் வாயை, தனது கையாலேயே பொத்திக்கொண்டு பேசினார்.

"நீயே சொல்லு பற்குணம். எங்க கோவிலுக்கு எப்போ கொடை கொடுத்தா இவங்களுக்கு என்ன. இவங்கதான், மொதல்ல கொடை கொடுக்கணுமுன்னு சட்டமா. இல்ல சர்க்கார் உத்தரவா. சொல்லு பற்குணம்.”

பற்குணம் பதில் சொல்வதற்கு முன்பு, அவரின் சின்னய்யா மகன் பீடி ஏசெண்ட் பால்யாண்டி பதிலளித்தான்.

"சட்டம் வேண்டாம். உத்திரவு வேண்டாம். சம்பிரதாயமுன்னு ஒண்ணு இருக்குல்லா. இந்த ஊர்லயே பெரிய குடும்பம் எங்க குடும்பம். எங்க வீரபத்திர சாமிக்கே ஒங்க ரெண்டு குடும்பமும் காளிக்கும், மாடனுக்கும் கொடுத்து முடிச்ச பிறவுதான் கொடுக்கோம். கடைசி வெள்ளில நடத்துற எங்களால முதல் வெள்ளில நடத்த முடியாதா என்ன."

"சரிப்பா. நாங்க ரெண்டு குடும்பமும் நடத்தல.. ஒங்க காத்துக் கருப்பன் வீரபத்திரனுக்கே முதல் வெள்ளில கொடுங்க. ஒங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/143&oldid=1243655" இலிருந்து மீள்விக்கப்பட்டது