பக்கம்:சாமியாடிகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

சு. சமுத்திரம்

144 சு. சமுத்திரம்

"நல்லதாப் படுதோ. கெட்டதாப் படுதோ. நாலு நாளு கெடு கொடுக்கேன். நல்லா யோசிச்சு ஊரோட ஒத்துவாங்க.."

"நீரு மட்டும் ஊராயிடாதே."

"ஆகுதா ஆகலியான்னு அப்புறம் தெரியும். ஒங்க கோயிலுல மேளச் சத்தம் கேட்டால், அப்புறம் இன்னொரு மேளச் சத்தமும் கேட்கும். அதுக்கு இடந்தராதிய. எழுந்திருங்கல. இவனுவ கிட்ட நமக்கு வேலயில்ல."

பற்குணம் எழுந்தார். அவருடன் வந்த சொக்காரர்களும் கரும் பட்டையான்களும் எழுந்தார்கள். இந்த காத்துக்கருப்பன் கூட்டத்தில் பலர் செம்பட்டையான், கரும்பட்டையான் குடும்பங்களில் பெண் எடுத்தவர்கள். கொடுத்தவர்கள். ஆனால் செம்பட்டையான் குடும்பத்தில் இப்படி உறவு வைத்திருப்பவர்கள் ஏழைகள். அவர்கள் பற்குணம் பேசியதை மனதுக்குள் ஆட்சேபித்துக் கொண்டே தத்தம் உடல்களை பின்னால் நடக்க விட்டார்கள்.

செம்பட்டையான்கள் ஆடிப்போய் விட்டார்கள். காஞ்சான், எலி டாக்டரை குற்றஞ்சாட்டுவது போல் பேசினார்.

"ஆழந்தெரியாமல் இறங்கிட்டோமே. காத்துக்கருப்பங்க கரும்பட்டையான் பயலுவகூட சேர்ந்துட்டாங்க. நாம எந்த மூலைக்கு. ஏய். துளசிங்கம் என்னடா இது."

துளசிங்கம், அழுத்தமாகப் பேசினான்.

"கவலைப்படாதிய சித்தப்பா. மெட்ராஸ்ல இருந்து லாரில ரெளடிகள கொண்டு வாறேன். சினிமா ஸ்டண்ட் ஆட்களையும்

לת

கொண்டு வாறேன். அதுக்குள்ள என் கையும் சுகமாயிடும்.

அலங்காரிக்கு வழக்கம்போல் நெஞ்சு கணத்தது. முன் நெற்றிக்குள், உள்ளிருந்து ஏதோ ஒன்று உருண்டு வந்து மோதியது. காதுகள் இரைந்து, வெளிச்சத்தை விரட்டின. அந்தக் கூட்டமே ஒரு காடாகவும், தான் மட்டும் தனியாகவும் தோன்றியது. எப்பிடில்லாம். குத்திக் குத்திப் பேகறாங்க... எல. காத்துக் கருப்பன்களா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/146&oldid=1243659" இலிருந்து மீள்விக்கப்பட்டது