பக்கம்:சாமியாடிகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

சு. சமுத்திரம்

146 சு. சமுத்திரம்

"ஒருவேள நான் நேருல போயி கேட்கலன்னு அவங்க நெனக்கலாம். நானே, எலி டாக்டர் வீட்ல போயி, கேட்கனே. என்ன சொல்றிய."

"அது மட்டும் கூடாது. அண்ணாச்சி. அந்த துளசிங்கம் செறுக்கி மவன். ஒங்கள பேர் சொல்லிக் கூப்புடுறான்."

"கோபத்துல சில வார்த்தை வாரத பெரிசா எடுக்கப்படாது. நம்ம திருமலைகிட்ட சண்டை போட்ட பிறகுகூட இந்த துளசிங்கம் ஒரு நாளு என்னைப் பார்த்துட்டு வாயில் இருந்த சிகரெட்ட தூக்கி எறிஞ்சுட்டு மரியாதையா போனான். நானும் போனேன்னு அவங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கட்டுமே."

"அது மட்டும் கூடாது. அண்ணாச்சி. ஒங்க மரியாதிக்காவ நாங்க சண்டைக்குப் போனோம். இனிமேல் எங்க மரியாதிக்காவ நீங்க போவப்படாது. அப்புறம் உங்க இஷ்டம்."

இஷ்டம் என்ற வார்த்தையை இஷ்டமில்லாமல் உச்சரித்த பங்காளிகளை, திடுக்கிட்டுப் பார்த்தார் பழனிச்சாமி எல்லாம் இவனால என்று திருமலையைப் பார்த்துப் பேசப்போன வாயை அடக்கிக் கொண்டார். அப்போது, அவர் தம்பி அருணாசலம் "இந்த துளசிங்கம் பயதான் ரொம்ப குதிக்கான். அந்த அடாவடிப் பயலோட இன்னொரு கையயும் ஒடிக்கனும்" என்றார்.

பழனிச்சாமி திட்டவட்டமாகச் சொல்லாமல், யோசனை கேட்பது போல் கேட்டார். "சரி. நாம் விட்டுக் கொடுப்போமா. அவனுவ வேணுமுன்னா வெள்ளில கொடுத்துட்டுப் போறான்."

"அண்ணாச்சி. இந்த விஷயத்துல மட்டும் எங்கள விட்டுக் கொடுத்திடாதிய எப்டி அப்படிக் கொடுக்கது, தர்மராசா, தம்பிமாருகள திரியோதனனுக்கு அடிமையாக்குனது மாதிரி, ஒங்க பெருந்தன்மய புரிஞ்சுக்க முடியாத தற்குறிப் பயலுவ அவனுவ..."

பழனிச்சாமி, காபி ரெடியா என்பது மாதிரி. கதவில் சாய்ந்து நின்ற மனைவி பாக்கியத்தைப் பார்த்தார். அவள் அப்போதுதான் ஞாபகம் வந்ததுபோல், சமையலறைக்குப் போனாள். பழனிச்சாமி திட்டவட்டமாகப் பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/148&oldid=1243661" இலிருந்து மீள்விக்கப்பட்டது