பக்கம்:சாமியாடிகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

151

சாமியாடிகள் 151

"இதோ பாரு கோலம். ஒன் மேல எனக்கு இது வாரதுக்கு முன்னால போட்ட திட்டம் அது. இப்போ அத மாத்தறது கஷ்டம். ஆனாலும் எங்க ஆட்கள் கிட்ட சொல்லிப் பாக்கேன். கெஞ்சிப் பாக்கேன். போதுமா.. அநேகமாய் எங்க கொடைய தள்ளி வச்சுடலாமுன்னு நினைக்கேன். அப்டி முடியலன்னா. நீ என்னை தள்ளி வச்சுடப்படாது."

'ரெண்டு குடும்பத்துக்குள்ள இவ்வளவும் நடந்த பிறகு நமக்குள்ள. நமக்குள்ள."

"கண் கலங்காத கோலம். நீ சொல்றது மாதிரி. இவ்வளவு நடந்த பிறகும் ஒங்க அண்ணன் நம்மை ஒண்ணாச் சேர விடமாட்டான். இந்த இடைவெளில காத்துக்கருப்பன் பயல்வ குறுக்கே வாரான். அவங்களுக்கு ஒன்னைக் கட்டணும் என்கிறதைவிட பழனிச்சாமி மாமா வீட்ல பெண்ணெடுத்தோமுன்னு பேர் வாங்கணும். அந்தப் பேராசையிலதான் நம்ம கிழ ஊரு விவகாரத்துல தலையிட்டு சண்டய பெரிசாக்கிட்டாங்க.. ஆனால் சத்தியமா சொல்லுதேன். அவங்க திட்டம் பலிக்காது. என்னால ஒன்னைக் கட்ட முடியுதோ இல்லியோ. அக்கினி ராசா கட்ட விடமாட்டேன். எங்க அம்மன் குடையை தள்ளிவச்சுட்டா என்ன செய்வாங்க முயற்சி செய்யப் போறேன். முடிஞ்சாலும் முடியலாம். அப்டி முடியாமப் போனாலும் ஒங்க கரும்பட்டையான் கூட்டம் என்னை அடிச்சாலும் பட்டுக்குவேன். திருப்பி அடிக்கமாட்டேன்."

"கை எப்டி இருக்கு.?"

"இப்போ பரவாயில்ல. நாளைக்கு கட்ட எடுக்கப் போறேன்."

"எங்கண்ணாகிட்ட ரூபாய் கொடுத்ததை தப்பா நினைக்கப் படாது. புளியம்பழம் வித்த பணம். அப்பா என்கிட்ட வீட்டுக்குள்ள வைக்க கொடுத்தாரு. நான்தான் சண்டைச் சத்தம் கேட்டு மறந்து போயி ரூபாவோட வந்துட்டேன். தப்பா நினைக்கப் படாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/153&oldid=1243670" இலிருந்து மீள்விக்கப்பட்டது