பக்கம்:சாமியாடிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

155

சாமியாடிகள் 155

"ஏய் தங்கம்மா. நீ மேல ஊருக்காரி. ஒனக்கென்னடி வந்திருக்கு. நாங்க ரெண்டு குடும்பமும் கீழே ஊர்காரிவ.

y;

அடிப்போம். பிடிப்போம். அணைப்போம். நீ பாட்டுக்கு சும்மா இரேன்.

"இனிமேல. நல்லா ஞாபகம் வச்சுக்க. ஊரு ஒண்ணுதான். அதுக்குத்தான் எல்லை உண்டே தவிர, அதுக்குள்ள எல்லை கிடையாது. இனிமேல் கருப்பனும் கரும்பட்டையானும் ஒண்ணு. செம்பட்டையான் வாயில மண்ணு. அம்மன் கொடையில பாக்கத்தான் போறோம்."

"ஏழா வார்த்தய அளந்து பேசுழா. இல்லன்னா ஒன் தலையில் மண்ணு விழும். இப்பவே."

"எங்கழா. மண்ணள்ளி போடு பார்க்கலாம்." "இன்னொரு தடவ சொல்லு பார்க்கலாம்."

கரும்பட்டையான்களை சும்மா சொல்லக்கூடாது. எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி பாவித்து விரட்டினார்கள்.

"நாங்கதான் நாயிமாதிரி ஒருத்தர ஒருத்தர் குதறுறோம். ஒங்களுக்கு என்னழா வந்துட்டு...? எழுந்திருங்கழா. இந்த சண்டைக்கு வினையே ஒங்க மூலந்தான் வந்துது. ஒடிப்போங்க. இந்தப் பக்கம் எவளும் வரப்படாது. ஏல. பக்கிரிசாமி. வெள்ளையால அடிக்கே. வெள்ளை சும்மா கண்ணப் பறிக்காண்டமா. போங்கழா."

பீடிப்பெண்கள் எழுந்தார்கள். தட்டும் பீடியுமாய் நடந்தார்கள். நாட்டு வக்கீல் நாராயணன் விரட்டினான். என்று எழவில்லை பீடியோட நேரம் வந்தாச்சு. அதோட இன்னைக்கு கணக்குப் பார்த்து காசு வாங்குற நாள். எடைபோட்டு இலை வாங்குற நாள்.

சிநேகிதத் தின் அடிப் படையில் ஒவ்வொரு த் தரும் , இன்னொருத்தியை இடித்தபடியே கலகலவென்று சிரித்தபடி போவாள். ஆனால், இன்றைக்கோ, காத்துக் கருப்பியும் கரும்பட்டையாள்களும் கலந்து போக, செம்பட்டையாள்கள் தங்களுக்குள் மட்டுமே சேர்ந்து போனாள்கள். திருமலை திட்டுவானே என்ற பயத்தில், துளசிங்கம் ஒதப்பானே என்ற அச்சத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/157&oldid=1243674" இலிருந்து மீள்விக்கப்பட்டது