பக்கம்:சாமியாடிகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

சு. சமுத்திரம்

156 சு. சமுத்திரம்

அந்தப் பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு வரையப்படாத சண்டைக்கோட்டைப் போட்டுக் கொண்டு, பீடிக்கடை படியேறினார்கள். நான்கு படியில் முடிகிற கல்தூண் திண்ணையில் சில சிறுவர்கள் பீடிக்கு லேபிள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளறையில் பீடி இலைகள், அடுக்கடுக்காய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. பக்கத்துலயே தூள்கள் குவியலாக இருந்தன. இரண்டுக்கும் மத்தியில் உள்ள மேஜையில் தராசு.

ஒவ்வொருத்தியும் ஒரு பயலிடம் பீடிகளை எண்ணிக் கொடுத்து விட்டு, கணக்குப் பிள்ளையிடம் கையளவில் உள்ள பேரேட்டை நீட்டினாள். அப்போது, ஒரு அண்டா குண்டா அறையில் இருந்து ஏசெண்டு வந்தான். இர் என்றோ 'இன்' என்றோ சொல்ல முடியாத வயசு, முப்பது முப்பத்தைந்து இருக்கும். அவன் முகத்தைவிட, முடி நன்றாக இருந்தது. உடம்பைவிட உடுப்பு நன்றாக இருந்தது. கண்ணுக்குக் கீழே கரும் வட்டங்கள். கைகளில் தேமல். ஆனாலும் அவன் அதட்டிச் சொன்னான்.

"செம்பட்டையான். குடும்பத்துப் பொண்ணுவளுக்கு இன்னையில இருந்து இல கிடையாது. நாளைக்கு வந்து கணக்க முடிச்சுக்கட்டும். இனிமேல் இந்தக் கடைப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கப்படாது. ஏல தேசிங்கு. மூணுல ஒரு பங்கு பீடி இலய கரும்பட்டையான், காத்துக் கருப்பன் பொண்களுக்கு நிரந்து போடுடா. செம்பட்டையான் பொண்ணுவள திரும்பிப் பாராம போங்க."

செம்பட்டையான் ரோசாப்பூ நேரடியாகக் கேட்டாள். "எங்கள எதுக்காவ போகச் சொல்லுதியரு."

'இது காத்துக் கருப்பன் பால்யாண்டி நடத்துற கடை. செம்பட்டையான் பொண்ணுவளுக்கு இங்க இடம் கிடையாது”

"நீரு ஒண்ணும் முதலாளி இல்ல. கம்பெனி ஏசெண்டு."

"சரி கம்பெனிக்கே கம்ளைண்ட் கொடுங்க. இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/158&oldid=1243675" இலிருந்து மீள்விக்கப்பட்டது