பக்கம்:சாமியாடிகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

157

சாமியாடிகள் 157

"செம்பட்டையான் ஆம்புளகூட சண்டைபோட வக்கில்ல. வந்துட்டாரு. பொண்ணுவகூட சண்ட போட."

"நான் சண்டை போட்டா. ஒங்களால தாங்க முடியாது. மரியாதியா போறியளா. இல்ல. பீடி ஒட்டுற பயலுவள வச்சு கழுத்தப் பிடிச்சுத் தள்ளணுமா..."

ஏசெண்டு, அப்படிச் சொல்லிவிட்டு, திடுக்கிட்டான். காரணம் பீடி ஒட்டும் பயல்களிலும் செம்பட்டையான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாளைக்கு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டம் போடுவது போல், மோவாயை அவர்களைப் பார்த்தே மேலும் கீழுமாய் ஆட்டினான். செம்பட்டையான் பெண்களில் பலர் ஏழைகள். சொத்துப்பத்து இல்லாத சூன்யங்கள். பீடி சுற்றியே பிழைப்பவர்கள். வேறு பிழைப்புத் தெரியாதவர்கள். அவர்கள் அழப்போவது போல நிற்பதைப் பார்த்துவிட்டு அவர்களிடம் ஆலமரத்தடியில் சண்டை போட்ட கரும்பட்டையான் வாடாப்பூ கோபத்தை நிதானத்தோடு காட்டிப் பேசினாள்.

"இவளுவள விரட்டுறது நியாயமில்ல. கோயில் சண்டைய கோயிலுலதான் பாக்கணும். மேளத்துல பாக்கணும். தாளத்துல பாக்கணும். பீடில பாக்கப்படாது. இவளுவளும் எங்கள மாதிரி தொழிலாளி பொண்ணுவ..."

பீடி ஏசெண்ட் துள்ளி எழுந்தான்.

'அம்மாமாருக்கு அவ்வளவு திமுரு உண்டாயிட்டோ... ஊர்க்காரனுவளயே உண்டு இல்லன்னு பார்க்கிற குடும்பத்துல ஆம்புளையாய் இருந்தாலும் சரி, பொம்புளையாய் இருந்தாலும் சரி. இங்க இடமில்ல. எவளாவது செம்பட்டையானுக்கு பிறந்தவதான் இப்டிப் பேசுவா. அப்படி பிறந்தவளுவ வராண்டாம். மத்தவளுவ வரட்டும். ஏய் தங்கம்மா. நம்ம குடும்பத்துக்காரிகள வரச் சொல்லு வாறியா..? இல்ல. அவங்கவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி பீடி சுத்துறதை நிறுத்திட்டு வயல் வேலையில போடச் சொல்லணுமா..?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/159&oldid=1243676" இலிருந்து மீள்விக்கப்பட்டது