பக்கம்:சாமியாடிகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

163

சாமியாடிகள் 163

பார்க்காம அவன் எப்படிப் பார்ப்பான் என்று ஆண்பார்வைக்கே புது இலக்கணம் வகுத்தபோது, அவள் அழவில்லை. வயதான, அம்மா, மகளுக்கு கல்யாணமாகாதோ என்ற ஏக்கத்தில் இறந்த போதுகூட, அவள் அந்த துக்கத்தை, ஒரு ஜீவனாவது கவலையற்ற இடத்துக்குப் போயிட்டே' என்று ஆறுதலில் மறந்தாள். இந்த பீடி ஏசெண்ட்டும், அப்போது பேசும்போதும், இப்போது பேசும்போதும் அவளுக்கு அழுகை வந்தது. ஆனால் அழவில்லை. ஆனால் இப்போதோ, அந்தப் பெண்கள் தனக்காக் ஒருமுகமாய் நிற்பதை நினைத்துப் பார்க்கும்போதே அழுதுவிட்டாள். இரண்டு பெண்களின் தோள்களில் கைகளை போட்டபடியே, தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஆட்டி அழுதாள். கண்ணில் பெருக்கெடுத்த நீரும், முகத்தில் துளிர்த்த வேர்வையும் வாயென்ற கடலில் வடித்து கொண்டிருந்தன. அந்தப் பெண்கள் துடித்துப் போனார்கள்.

"அழாதே ரஞ்சிதம். அழாத. அவன் அறிவில்லா பயல். நாங்களும்தான் அவனுக்கு நல்லா கொடுத்தமா. அவன் தலையில் சானிய ஒரு துண்டாவது எடுத்துப் போட்டிருக்கணும். அது செய்யாதது தப்புதான். அழாத ரஞ்சிதம்."

ரஞ்சிதம் கண்ணிரைத் துடைத்த ஒருத்தியின் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டே விம்மலுக்கிடையே பேசினாள்.

"நான் அவர் திட்டுனார்னு."

"அவரு பெரிய இவரு எரப்பாளிப் பயல மரியாதியா பேசாத. சரி ஏதோ பேச வந்தே. சொல்லு ரஞ்சிதம்."

"நான் அவனுக்காவ அழல. ஒங்க அன்ப நெனச்சால் அழுக வருது, ஒங்க அன்புக்கு நான் தகுதியா இருக்க மாட்டேனோன்னு பயம் வருது."

"சரி. சரி. சொம்மா கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காத சரியாயிடும். நீ இப்போ எதுவும் பேசப்படாது. ஆமா. அந்தப் பக்கம் தற்செயலா வந்தியா? இல்ல இப்படி நடக்குமுன்னு எதிர்பார்த்த் வந்தியா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/165&oldid=1243683" இலிருந்து மீள்விக்கப்பட்டது