பக்கம்:சாமியாடிகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

165

சாமியாடிகள் 165

"இன்னும் வயித்துக்குள்ள எதுவும் போகல. காபியக்கூட சரியா குடிக்கவிடாம அந்த நாசமாப்போற நாட்டு வக்கீலு வந்து விரட்டிட்டான். வீட்ல போயி கொஞ்சம் கஞ்சி குடிச்கட்டு வாறேன். எங்க வரணும் ரஞ்சிதம்."

"இங்கேயே வாங்க."

"முன்னப்பின்ன யோசிக்காம ஏமுழா எழுந்திருக்கிய பீடிப்பய, ரஞ்சிதத்த இங்க வந்து மிரட்டப் போறான்."

ரஞ்சிதம், பொதுப்படையாய் பேசினாள்.

"நீங்க போங்க ஒரு பொண்ண. அவமானப் படுத்துனால ஆயுள் தண்டனைன்னு சொல்லிட்டிங்கல்லா. அந்த ஆளுக்கு இது பொய்யுன்னு தெரியாது. ஒரு பொண்ண என்னபாடு படுத்திட்டும் ஜாமீன்ல வந்துட. சட்டம் இடம் கொடுக்கது அவனுக்குத் தெரியாது. அவன மாதிரி ஆட்கள் முட்டாளா இருக்கதும், ஒரு வகையில நல்லதுக்குத்தான். சரி சீக்கிரமா போயிட்டு வாங்க.."

அனைத்துப் பெண்களும் ரஞ்சிதத்தை வியப்போடு பார்த்துவிட்டு நடந்தபோது, ரஞ்சிதம் வாடாப்பூவையே வியந்தபடி பார்த்தாள். அவளுக்கு இப்போது முதுகு காட்டி நடக்கும் இந்த வாடாப்பூ கரும்பட்டையான் குடும்ப முழு உணர்வையும் மீறி வந்தவள். அவள் பெரிய மனுஷி. பாதிக்கப்படும் வாய்ப்பு வராதபோதே. பாதிக்கப்பட்டு விட்டவர்களோடு சேர்ந்த அவள் முன்னால் போய் நின்று கும்பிட வேண்டும்.முருகனைக் கும்புடுவதும் கும்பிடாததும் அப்புறம்.

ரஞ்சிதம், முருகன் சிலையையே உற்றுப் பார்த்தாள். அந்த கோவணாண்டியை பார்த்துப் பார்த்துப் பேசிக் கொண்டாள். முருகா. ஒன்னைப் பார்க்கப் பார்க்க என் மனம் நெகிழுதுடா. ஒன்ன இந்தக் கோலத்துல பார்க்கும் போதெல்லாம் நீ சிவன் மகன் மாதிரி எனக்குத் தெரியல. சிவகாசில தீப்பெட்டித் தொழிலுல ஈடுபட்டிருக்கிற சின்னப் பையன் மாதிரி தெரியுதுடா. இந்த ஏசெண்ட் கிட்ட பீடி ஒட்டுற பிஞ்சுகள் மாதிரி தோணுது. நீ கைலாசத்த விட்டது மாதிரி. நீ படிக்க வசதியில்லாம பள்ளிக்கூடத்த விட்டுட்டு மரம் வெட்டுற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/167&oldid=1243690" இலிருந்து மீள்விக்கப்பட்டது