பக்கம்:சாமியாடிகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

சு. சமுத்திரம்

168 சு. சமுத்திரம்

பூசுங்கடா" என்றார். கம்பு, மஞ்சள் குங்குமமாய் மங்களமானபோது, பழனிச்சாமி, அரச இலைகளை அதில் கட்டினார். உடனே மேளச்சத்தம் பலமாய் ஒலித்தது. நாதஸ்வரம் உச்சிக் குரலுக்குப் போனது. சாமியாடி தாத்தா, வெட்டு வந்தவர் போல் தரையில் அங்குமிங்கும் புரண்டு எழுந்தார். எழுந்தவர் அப்படியே ஆடாமல் நின்றார். இப்படி கால்நடும்போது மேளம் கெட்டியாக ஒலிக்க வேண்டும். ஒலித்தது. ஆனால் அப்படி ஒலித்தது அருகே நின்ற சுடரொளிவு மேளமல்ல. சுடலைமாடன் கோவிலில் உள்ள கணேச மேளம் அங்கேயும் கால் நடப்பட்டது. பழனிச்சாமியின் தம்பி அருணாசலம் கத்தினார்.

"யோவ் சாமியாடி பெரிய்யா. இந்த மேளத்துக்கும் அந்த மேளத்துக்கும் வித்தியாசம் தெரியாட்டா நீரு என்னய்யா சாமியாடி? ஏல சுடரொளிவு, கால் நட்டாச்சுல்ல. ஏமூல சும்மா இருக்க. தட்டேமுல."

"எவ்வளவு ரூபாய் தரப் போறாகளோ. ஈரங்கிப் பய மவனுவ" என்று யோசித்துக் கொண்டிருந்து சுடரொளிவு, பீப்பி ஊத, அவன் தம்பி, தலை தவிடு பொடியாக்கப் போவது போல் அடித்தான். மேளம்' அடிப்பதற்கு முன்பே ஊத வேண்டிய ஊமைக் குழலை சுடரொளியின் மச்சான் இப்போது தான் சாவகாசமாகத் துடைத்தான். சாமியாடி தாத்தா, திடீரென்று நின்ற இடத்தில் நின்றபடியே குதித்தார். பிறகு மேளச் சத்தத்திற்கு ஏற்ப டங்டங் என்று ஆடினார். அந்த ஆலமரத்திற்கு அப்பால், அதனால் மறைபட முடியாதபடி உள்ள அம்மன் கட்டிடத்திற்கும் கால்நாட்டப்பட்ட இடத்திற்கும் இடையே, தாத்தா ஆடினார். தள்ளாமையில் பாதியாட்டம். தானாக பாதியாட்டம்.

அம்மன் கோவில், ஒரு சின்ன அரண்மனை மாதிரி இருந்தது. கல் கட்டிடம் பன்னிரண்டு படிகளேறினால் அம்மனின் முகப்பு அறைக்குப் போகலாம். அம்மன் அதற்கும் உள்ளே, மூன்றடி உயரப் பீடத்தில் இருந்தாள். மண்சிலைதான். ஆனால் வெண்கலத்தை விடக் கெட்டியான சிலை. சிலைக்கு கீழே அறுகோணத் தகடு. சட்டமிட்டுக் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டது. அம்மனுக்கு ஆறு கைகள் ஒன்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/170&oldid=1243698" இலிருந்து மீள்விக்கப்பட்டது