பக்கம்:சாமியாடிகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

169

சாமியாடிகள் 169

அரிவாள். இன்னொன்றில் திரிசூலம், மற்றொன்றில் சுதர்சன சக்கரம். நான்காவது கையில் பாராங்குசம். இதர இரண்டு கரங்களும் பின்பக்கமாய் இருப்பதால் அவற்றில் என்ன உள்ளன என்பது தெரியவில்லை. இந்த ஆயுதங்கள் அனைத்தும் அசல் மண்ணாலானவைதான். ஆனால், அம்மனை கொத்திதிரி, சூலத்தி, கோணத்தி பயங்கரியாகக் காட்டுபவை. அம்மன் காலடியில் அசல் வெட்டரிவாள். இரும்புத் திரிசூலம். ஒரு மூலையில் கம்பீரம் காட்டியது. ஆகாயத்தில் இருந்து தொங்குவதுபோல் இரும்புக் கம்பியில் தொங்கிய இரண்டு விளக்குகள் எரி நட்சத்திரங்களாய் ஜொலித்தன.

சாமியாடி தாத்தா இன்னும் ஆடுவதை நிறுத்தவில்லை. திருமலை அவர் முன்னால் போய் நின்று ஆடினான்.

"நம்ம கால்துசிக்குப் பொறாதவன். இந்த செம்பட்டையான் பயலுவ. துள்ளோ துள்ளுன்னு துள்ளுதான். அவங்க அம்மன் கொடைய தடுக்க துப்புல்ல. காளியாத்தாவுக்கு ஆட்டமாம் பெரிய ஆட்டம்."

சாமியாடி ஆடியபடியே உத்திரவு சொன்னார்.

"கவலைப்படாதே. என் மவனே. அவன் கொடை நடக்காது. என் மவன் சுடலைகிட்ட சொல்லிட்டேன். தாய்க்குப் பின்தான் தனயன்."

"அதோ பாரு காளி. அங்கே நாலுபேரு எப்படி ஆடுறாங்கன்னு. அரச இலய எவ்வளவு உயரமா கட்டியிருக்காங்கன்னு. டேய் மாயாண்டி. நம்ம இலயயும் அவங்க கட்டுன உயரத்திற்கு கட்டுடா."

"அச்சப்படாதடா மகனே. அவனுவ பரிதவிச்சு நிக்கப் போறானுவ பாரு, அவனுவள பாதாள சிறையில அடைக்கப் போறேன் பாரு..."

"சரி. சரி. நீரு அடைச்சது போதும். இப்போ நிறைய வேல

இருக்கு. ஆடுறத நிறுத்தும். நீரு இப்போ ஆடுறதோட சரி கொடையில ஒம்ம பேரன்தான் ஆடணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/171&oldid=1243699" இலிருந்து மீள்விக்கப்பட்டது