பக்கம்:சாமியாடிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

சு. சமுத்திரம்

170 க. சமுத்திரம்

சாமியாடி, கற்பூரத்தட்டில் உள்ள திருநீறையும், குங்குமத்தையும் எல்லோருக்கும் வெறுப்போடு இட்டுக் கொண்டிருந்தார். நெற்றியென்று திருநீறை உதட்டில் தேய்த்தார். நெற்றிப் பொட்டென்று குங்குமத்தைக் கண்ணில் தேய்த்தார். ஒரே கத்தல். பீடி ஏசெண்ட், பயபக்தியுடன் விபூதி வாங்கினான்.

பழனிச்சாமி, அரச இலைகளை அவிழ்த்து மேலே கட்டப்போன மாயாண்டியைக் கையாட்டி நிறுத்தினார். பிறகு, கோவிலைச் சுற்றி நடைபெறும் வேலைகளில் கண்களைச் சுழல வைத்துப் பார்த்தார். அம்மன் சிலைக்கு, வர்ணம் தீட்டுவதற்காக ஒரு குயவர் கோயிலுக்குள் போய் ஒரு கும்புடு போட்டுவிட்டு, திரைச்சீலையை இழுத்துப் போட்டார். கோவிலுக்கு எதிரே ஆலமரத்தைத் தாண்டி, ஒரு செவ்வகக் கட்டிடம். முப்பதடி உயர தகரக் கதவு போடப்பட்ட படாதி கட்டிடம். அங்கிருந்து சப்பரம். இழுத்து வெளியே கொண்டு வரப்பட்டது. நான்கு பக்கமும் வண்டிப் பைதாக்கள் அவற்றுக்கு மேல் சதுரமான தேக்குப் பரப்பு. அதிலே ஒரு மூன்றடி உயரப்பீடம். பீடத்தின் மேல் அம்மனின் வெண்கல அவதாரம். அதற்கு மேலே விதவிதமான புராணப் பொம்மைகள். சப்பரத்தின் முன்பக்கம் இரண்டு மண்குதிரைகள். அவற்றை நிசக் குதிரைகளாய் நம்ப வைப்பதுபோல் இருபுறமும் கட்டப்பட்டு முக்கோணம் போல் ஒன்று பட்ட குறுக்குச் சங்கிலி வடம். அதைப் பிடித்துத்தான் சப்பரத்தை இழுக்கவேண்டும். இந்தச் சப்பர, சக்கரக் கம்புகளைத் தச்சர்களும் இரும்பு பட்டைகளைக் கொல்லர்களும் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் இதற்குள் டிராலி மாதிரி ஒரு வண்டியைக் கொண்டு வந்தார். அதன்மேல் நெருக்கமாக நான்கு இரும்புக் குழாய்கள். அவற்றில் கருமருந்தை இட்டு நிரப்பினார். பிறகு ஒரு கயிற்றில் பிடித்த நெருப்பை ஒரு குழாயில் பற்றவைத்துவிட்டு ஓடினார். அவர் ஒடுவதற்குள் பயங்கர சத்தம். டப்டப்பு என்று சத்தம். நாட்டு வக்கீல் நாராயணன் அங்கலாய்த்தார்.

"இது பழைய வேட்டு. பழைய சத்தம். தொலவுல கேட்கிறவர் களுக்கு நம்ம கோவில் வேட்டா, அந்தப் பயலுவ கோயில் வேட்டான்னு தெரியாது. அங்க பாருங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/172&oldid=1243700" இலிருந்து மீள்விக்கப்பட்டது