பக்கம்:சாமியாடிகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

177

சாமியாடிகள் 177

"அம்மன் கொடை சமயத்துல. அந்தப் பயலுவ வம்பு பண்ணப் போறது மாதிரியும் ஒரு பேச்சு அடிபடுது."

"கவலைப்படாதிய. அம்மன் கொடையில நீங்க அக்கறை செலுத்துங்க. நாங்க கரும்பட்டையான் பயலுவள கவனிச்சிக் கிடுறோமுன்னு காத்துக் கருப்பங்க கைமேல் அடிச்சு சத்தியம் செய்யாத குறையா சொல்லிட்டாங்க."

"சொந்தக் காலுல நிக்கணுண்டா..." பழனிச்சாமி, கடைசியாய் இப்படிப் பேசியபோது, கோலவடிவு உள்ளே வந்தாள். அப்பாவிடம் ஏதோ பேசப்போவது போல் முகத்தை நிமிர்த்தினாள்.

"இப்போ எப்டி இருக்காள்."

"பெரியப்பா. சாப்பிடச் சொன்னாருன்னு. சொன்னேன். நீ சாப்பிடாட்டா அவரு சாப்புட மாட்டாராமுன்னும் சொன்னேன். உடனே அலறியடிச்சு சாப்புட்டுட்டா... நீங்க காலையில இருந்தே சாப்புடலன்னேன். அழுதுட்டாள்."

"யாரு கோலம்.”

"வாடாப்பூ." "அவளுக்கு என்ன கேடு.”

பழனிச்சாமி விளக்கினார்.

"எனக்கு இப்பதான் வயிறு குளிருது. பாக்கியம் சோறு போடு. எப்பா ஒங்ககிட்டே சாப்புட்டுக்கிட்டே பேசலாமா."

"இதுல என்னண்ணாச்சி இருக்கு. ஏன் சாப்புடல."

"நம்ம வாடாப்பூ. பீடிக்கடை தகராறுல செம்பட்டையான் பொண்ணுவ பக்கம் சேர்ந்து முருகன் கோயில் பக்கத்துல ரஞ்சிதம் ஏற்பாட்ல இன்னொரு கம்பெனி பீடி சுத்தியிருக்காள். இது தெரிஞ்சதும் இந்தப் பய மாயாண்டி, பெத்த மகளை நாலு பேரு முன்னால வாங்கு வாங்குன்னு வாங்கிட்டான். நானும் அப்போ

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/179&oldid=1243707" இலிருந்து மீள்விக்கப்பட்டது