பக்கம்:சாமியாடிகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

சு. சமுத்திரம்

180 சு. சமுத்திரம்

"ஊர் வாய மூட உலமூடியா. இருக்குது மாப்பிள்ள."

"தயவு செஞ்சி குறையும் கேளுங்க மச்சான். கோலவடிவுக்கும் அக்கினி ராசாவுக்கும் கல்யாண முன்னு இப்பவே ஒரு முடிவெடுக்கணும். இல்லன்னா இல்லன்னு தெரியப்படுத்தணும். முடிவு எப்டின்னாலும் நாங்க ஒங்க பக்கந்தான். செம்பட்டையான் குடும்பத்துக் காசிராஜன் மகள சொல்லி அனுப்புனாக, காசிராஜன் மகள முடிவு பண்ணிட்ட பிறகும் ஒங்களையே சப்போட்டு செய்தால் ஒங்களுக்கு பெரும. எங்களுக்கும் பெரும. ஆனால் ராமய்யா அண்ணாச்சிக்கு மனசு கேக்கல. பழனிச்சாமி மச்சான் வாயால முடியாதுன்னு வந்தால். காசிராஜனுக்கு முடியுமுன்னு சொல்லி அனுப்பலாமுன்னு நெனைக்கார் என்னா அனாவசியமாய் ஒரு பொண்ணு பெயரும், பையன் பெயரும் இதுக்கு மேல அடிபடப்படாது பாரும்." : -

"ஒங்க கூடப் பிறந்த தம்பி நான். ஒங்க மதிப்பு. ஒரு இம்மியளவு குறைஞ்சாக்கூட உயிர விடுறவன் நான். அப்படிப்பட்ட நான் சொல்லுதேன். ஏசெண்டு மாப்பிள்ள இப்போ ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும். எந்தப் பக்கம் பொண்ணு எடுக்கமோ அந்தப் பக்கம் தானா சாயுறோம். நம்ம குடும்பத்துல பாதிப்பேரு மெட்ராஸ் போயிட்டதால இப்போ நமக்கு ஆள் பலம் இல்ல. யானை சகதில மாட்டிக்கிட்டா தவளை கூட கிண்டல் பண்ணுமாம். நாம நாட்டாமையாய் இருக்கையில நமக்கு கப்பம் கட்டுன இந்த செம்பட்டையான் பயலுவ... நம்மளயே. எதுக்குறாமுன்னு நம்ம குடும்பத்து பயலுவ மெட்ராஸ்லயே இருந்துட்டதுதான் காரணம். நம்ம பாட்டி பிறந்த குடும்பம் காத்துக் கருப்பன் குடும்பம். நம்ம அத்தைய கட்டிக்கிட்ட குடும்பம். பழைய உறவு போயிடப்படாது. அதனால."

அருணாசலம் விட்டதை ராமசுப்பு தொடர்ந்தார்.

"அக்கினி ராசாவும். நல்ல பையன். நல்ல குடும்பம். திரண்ட சொத்து இருக்கு. அவங்க குடும்பம் இந்த உறவால. அடுத்த தலைமுறையில கூட நம் பக்கம் நிற்கும். இந்த சங்கதிய கேள்விப்பட்டாலே செம்பட்டையான் செத்துப் போவான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/182&oldid=1243712" இலிருந்து மீள்விக்கப்பட்டது