பக்கம்:சாமியாடிகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

183

சாமியாடிகள் 183

கோவிலில் திரை விழுந்தது. அம்மனுக்கு கண் திறக்கப் போறாங்களாம். அம்மனின் இரண்டு கண்களிலும் மஞ்சளைப் பூசுவார்கள். பிறகு சந்தனத்தை அப்புவார்கள். அப்புறம் கோலவிழியில் வர்ணம் போடுவார்கள். உள்ளே கறுப்பு வட்டம் போடுவார்கள். ஒரு மையைக் கொட்டுவார்கள். இதுமேல் தான் கண்திறப்பு. அம்மா கண்திறக்க, ஒரு மணி நேரமாவது ஆகும். அதுக்குள்ள என் கண்ணே மூடிடும். மூடிடும்.

கோலவடிவு, கோயில்முன்பு போடப்பட்ட குவிந்த பந்தலைப் பார்த்தாள். மேல்தளத்தில் போடப்பட்ட பட்டாடைகளை நோக்கினாள். விதவிதமான ஜிகினா காகிதங்களைக் கண்ணுற்றாள். சப்பரம் பல்வேறு தெய்வப் பொம்மைகளால் அலங்காரமாக நின்றது. வில்லுப்பாட்டாளிகள் உட்காரப் போகும் பெஞ்சு மேட்டைப் பார்த்தாள். அம்மனுக்காக எல்லாம் இருக்கு. ஆனால் அம்மன்த்ான் இல்லை. எனக்கு வழக்காளி அப்பா இருப்பதுபோல், எனக்காக அரிவர்ளை எடுத்த அண்ணன் இருப்பதுபோல், அம்மனுக்கு சப்பரம் இருக்கு. பந்தல் இருக்கு. ஆனால் அம்மன் இல்ல. எனக்கு நானே இல்லாமப் போனது மாதிரி. அம்மா. காளியம்மா. இது அடுக்குமாடி உனக்கு மட்டும் சர்வ வல்லைமையுள்ள ஈஸ்வரன், எனக்கு மட்டும் ஒரு இடிச்சபுளி என்னதாயி நியாயம்.

கோலவடிவு, அம்மனுக்குப் புறமுதுகு காட்டியபோது, அலங்காரி அத்தை எதிர்ப்பட்டாள். இவளைப் பார்த்து அவள், காலில் குத்திய முள்ளை எடுப்பது போல, ஒத்தக் காலில் நின்றாள். கோலம் அங்கே ஒடிப் போனாள். அத்தையிடம் பேசினால் அழுகை வரும். அதோ அந்த வெடி வண்டி சத்தம் போல. அப்பாவுக்கு கேட்கும்படியாய் சத்தம் வரும்.

கோலவடிவு, அத்தையின் முன்னால், கோலிபோல் சுருட்டப்பட்ட அந்த காகிதத்தை எறிந்துவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தாள். அத்தையோடு இணைந்து நடக்க முடியவில்லை. ஊர் இருக்கும் இருப்பில், அது முடியாத காரியம். ஆனாலும், அலங்காரி அத்தை பின்னால் நடந்தபடியே முன்னால் போனவளுக்கு அபயமளித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/185&oldid=1243715" இலிருந்து மீள்விக்கப்பட்டது