பக்கம்:சாமியாடிகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

சு. சமுத்திரம்

186 சு. சமுத்திரம்

"ஆமா. சினிமாப் படத்த கோவிலுக்குள்ள வைக்கதா. வெளிலயா..."

"துளசிங்கம் பார்த்துக்குவான்."

"எல்லாத்தையும் துளசிங்கம் பாத்துக்குவான்னா நாம எதுக்கு. "நன்றியில்லாமப் பேசாதல. நம்ம துளசிங்கம் ஊருக்கு வந்த பிறகுதான் நமக்கு பேரு."

"நம்ம பலத்துலதான் அவனுக்கும் பேரு." "ஒன்கிட்ட மனுஷன் பேசுவானா."

"நீ பேசாண்டாம். ஆனால் அங்க சாராயம் காய்ச்சுற பயல்களை அம்மன் கொடை முடியுறது வரைக்குமாவது கொஞ்சம் தள்ளிப்போய் காய்ச்சச் சொல்லுப்பா."

"நீ ஒருத்தன். அம்மன் கொடைக்காகவே ஸ்பெஷலா காய்ச்சுதான். அவன அப்புறப்படுத்துனா நம்ம ஆளுவ ஒன்ன அப்புறப்படுத்திடுவானுவ..."

வெளிப் பந்தலுக்குள் நடந்த இந்தப் பேச்சுக்கள் கேட்கும் தூரத்திலேயே விழுந்தாலும், எலி டாக்டர் காதுகளில் அவை விழவில்லை. மனிதர் குட்டி போட்ட பூனை மாதிரி பந்தலுக்கு வெளியே அங்குமிங்குமாகச் சுற்றினார். வட்ட வட்டமாகவும், சதுரம் சதுரமாகவும் நீள நீளமாகவும் நடந்தார். யாரிடமாவது புலம்பியாக வேண்டும்.

எலி டாக்டர் சத்தம் போட்டுக் கத்தினார்.

'ஏய் அலங்காரி. ஒன்னத்தான் பிள்ள. ஒரு நொடி வந்துட்டுப்போ..."

சுடலைமாடன் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் வண்டிப்பாதை ஒரமாக ஆட்டுக் கிடாவுடன் போன அலங்காரி, அவரைப் பார்க்காதது போலவும், கேட்காதது போலவும் போனாள். அவர் இரண்டாவது தடவையாகக் கத்தும்போது, முகத்தைச் சுழித்தபடி நின்றாள். நான் பொம்புள. அங்கென்ன வேலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/188&oldid=1243726" இலிருந்து மீள்விக்கப்பட்டது