பக்கம்:சாமியாடிகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

187

சாமியாடிகள் 187

எலி டாக்டர், கத்திக் களைத்துவிட்டு, அவளை நோக்கி நடந்தபோது, அலங்காரி அவரைப் பார்த்து நடந்தாள். ஆட்டை ஒரு வாதமடக்கி மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, ஆடியசைந்து நடந்தாள். பின்னர் இருவரும் இணைந்து நடந்தார்கள். அலங்காரி, வெட்கப்பட்டு "சீ முன்னால நடயும் இல்லன்னா. பின்னால நடயும்" என்றாள். எப்படியோ இருவரும் முன்னாலும் பின்னாலுமாகக் கோவில் பக்கம் வந்தார்கள்... எலி டாக்டர், பந்தலுக்குள் நின்றவர்களைச் சாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டே ஒப்பாரி வைக்காத குறையாக ஊளையிட்டார்.

“பாரு.. அலங்காரி. இந்த துளசிங்கம் பயல், செய்யுற அட்டுழியத்த. அம்மன் கொடைக்கு தடிப்பய உரக்கடையில சம்பாதிச்சத விட்டுடுவான் போலுக்கு, வெளிப் பந்தலும் இவன் பொறுப்பாம். சினிமாவும் இவன் பொறுப்பாம். டான்சும் இவன் பொறுப்பாம். இந்த கழிசடைகள பாக்கிறது மட்டும் சொக்காரப் பயலுவ பொறுப்பாம். இதுக்கு மேல செலவளிக்காண்டாமுன்னு நீ கொஞ்சம் அவன் கிட்ட சொல்லு பிள்ள."

"துளசிங்கம் எதுலயாவது பணத்த விட்டா அத வட்டியும் முதலுமா எடுக்குறவன். நாமதான் அவன்கிட்ட யோசனை கேட்கனும். அவனுக்கு சொல்ல வேண்டியதில்ல. சரி போவட்டம். கோலவடிவுக்கும் அக்னி ராசாவுக்கும் முடிவாயிட்டாமே."

"கேள்விப்பட்டேன். ஆயிரந்தான் நடந்தாலும் எனக்கு மனசு கேட்க மாட்டேங்கு. கிளியை வளத்து பூனைகிட்ட."

"பூனைகிட்ட கிளி போகல. நாயி கிட்ட தேங்காய கொடுக்காவ அது தானும் தின்னாது. யாரையும் தின்னவும் விடாது."

"இதுல இன்னொரு விஷயமும் சம்பந்தப்பட்டிருக்கு அலங்காளி. காத்துக் கருப்பன் பயலுவ எப்போ நம்ம கோயிலுல மேளச் சத்தம் கேக்குதோ அப்போ நம்ம கோயிலையே ஒடைக்கப் போறதா பேசிக்கிறானுவளாம். எனக்கு கையும் ஒடமாட்டங்கு. காலும் ஒடமாட்டங்கு. அவங்களுக்கு என் மவன் துளசிங்கம் மேலதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/189&oldid=1243730" இலிருந்து மீள்விக்கப்பட்டது