பக்கம்:சாமியாடிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

17

சாமியாடிகள் 17

"பாத்தியா. அப்போ. சித்தி கேட்டதுல தப்பில்லியே.?"

துளசிங்கம் அலங்காரிச் சித்தியின் முதுகைச் செல்லமாகத் தட்டிக்கொடுத்தபோது வெள்ளை வெளேர் முத்தம்மா ஆச்சரியமாகக் கேட்டாள்.

"துளசி மச்சான்."

"ஏழா. ஒனக்கு அவன் அண்ணாச்சி முறை வேணும். ஒங்க தாத்தாவோட அம்மாவும், அவன் தாத்தாவோட அம்மாவும் சின்னம்மா பெரியம்மா மக்கள். ஆசைக்காக உறவை மாத்தப்படாது."

“ஏதோ ஒரு முறை. துளசி. ஒம்மத்தான். மொத்தம். நீரு எவ்வளவு இடம் சுத்தியிருப்பியரு."

"ஏண்டா பராக்கு பாக்கது மாதிரி பாக்கே. எல்லாப் பொட்டப் பிள்ளியளும் ஆவலோட முகத்த நிமித்துறாளுவ பாரு. ஒன் பவுசத்தான் சொல்லிக் காட்டேன்."

துளசிங்கம், ஒரு குட்டிப் பிரசங்கம் செய்யப் போகிறவன்போல், மார்பில் சாத்திய கம்பை நிமிர்த்தி மைக் மாதிரி பிடித்துக் கொண்டான். பிறகு எல்லோரையும் பொதுப்படையாகவும், கோலவடிவைக் குறிப்பாயும் பார்த்தபடி பேசப் போனான்.

"பத்து வயசில. எங்கப்பா என்னை."

"ஆமாம். மச்சான் தப்பா நினைக்கப்படாது. ஒங்கப்பாவை ஏன் எல்லோரும் எலி டாக்டர்னு சொல்லுதாவ..."

அலங்காரி, பொய்க் கோபத்துடன் அதட்டினாள்.

"ஏய் முத்தம்மா. வாயைக் கிழிச்சுப்புடுவன் கிழிச்சி. என் மச்சானை என் முன்னால வச்சே. எலி டாக்டருன்னு சொல்லுற அளவுக்கு தைரியம் வந்துட்டோ. ஏதோ சின்ன வயசுல. என் மச்சானை. அப்படி ஒருத்தன் மசக்கிப்புட்டான். அப்போ மச்சானுக்கு ஏழு வயசாம். ஒரு ஜோஸ்யக்காரன் அவருகிட்ட காலனா வாங்கிக்கிட்டு. நீ பிற்காலத்துல டாக்டரா வருவடான்னு சொல்லிட்டுப் போயிட்டானாம். இந்த கூறு கெட்ட மனுஷனும் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/19&oldid=1243292" இலிருந்து மீள்விக்கப்பட்டது