பக்கம்:சாமியாடிகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

191

சாமியாடிகள் 191

கோலவடிவையே பார்த்த துளசிங்கத்தை அலங்காரி ரசித்துப் பார்த்தாள். இதுவரை தான் செய்யப்போவது நியாயமா என்று நெஞ்சுக்குள் பாதிக்குப் பாதியாய் சிந்தித்த அலங்காரி, அருணாசலந்தான் அப்படிப் பேசினான் என்பதை எலி டாக்டர் மூலம் கேள்விப்பட்ட உடனேயே மனதை கல்லாக்கினாள். இல்லை. அதுவே கல்லானது.

"துளசிங்கம் ஒன்கிட்ட தனியா பேசணும். அவசரம். அவசியம். நம்ம பருத்தித் தோட்டம் வரைக்கும் பேசிக்கிட்டே நடப்போம்."

"என் பிரண்டுங்கள விட்டுட்டு.”

"ஓ.கே. துளசி. போயிட்டு வா. நாங்க கோவிலுல லொகேஷன் பாக்கோம்."

எலி டாக்டர் நடுங்கிப் பார்த்தபோது

அலங்காளி அவருக்கு முருகனைப் போல் அடைக்கலக் கையைக் காட்டிவிட்டு, துளசிங்கத்துடன் நடந்தாள். கோலவடிவோ, சோளத் தோட்டத்திற்குள் ஒவ்வொரு சோளச் செடியையும் விலக்கி விலக்கி பார்த்துப் பார்த்து உள்ளே போனாள்.



21

பொதுவாக, சமய சந்தர்ப்பங்கள் சம்பந்தப்பட்டவர்களைக் காலால் இடறுவதுதான் பெரும்பாலான வழக்கம். ஆனால் அலங்காரிக்கோ, அது இப்போது கை கொடுத்தது. கோலவடிவைக் கடத்திக் கொண்டு போக வேண்டும் என்பதை எப்படித் துளசிங்கத்திடம் எடுத்துரைப்பது என்று அவள் யோசித்தபோது அவர்களுக்குப் பின்னால் நடந்த அக்னிராசாவின் சித்தப்பா பற்குணமும், கரும்பட்டையான் ராமசுப்பும் அவர்களுக்கு முன்னால் நடந்து ஒரு ஒரமாக நின்றார்கள். பற்குணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/193&oldid=1243737" இலிருந்து மீள்விக்கப்பட்டது