பக்கம்:சாமியாடிகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

சு. சமுத்திரம்

192 சு. சமுத்திரம்

ராமகப்புவுக்குச் சொல்வதுபோல், துளசிங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

"நீ ஏண்டா கவலைப்படுறே. ஊரையே அடிக்கப்போறது மாதிரி. மெட்ராஸ்ல இருந்து அம்போக்குப் பயலுவள இறக்கிட்டான்னு யோசிக்காதடா. ஒவ்வொரு பய செம்பலும்பையும் இறக்கிக் காட்டுறேன். ஊரைப் பகைக்கின் வேரோடு கெடும் என்கிறது பழமொழி. பாத்துப்புடலாம். குஸ்திப் பயலுவளாம். குஸ்திப் பயலுவ. செறுக்கி மவனுவ என் ஒத்தக் கைக்கு பொருவானுவளா. ஒரே வெட்டுத்தான், மேளச்சத்தம் மட்டும் கேக்கட்டும். அதுவரைக்கும் பொறுத்துக்க."

துளசிங்கம் ஏதாவது பதில் சொன்னால், அங்கேயே அவனை இரண்டில் ஒன்றைப் பார்க்கப் போவதுபோல், அந்த இருவரும் அவனையே பார்த்தபடி மெள்ள நடந்தார்கள். துளசிங்கம் வேறுபக்கம் முகத்தைத் திருப்பியதால், அதுவே ஆரம்ப வெற்றி என்று அனுமானித்து, ஒரு கிளை வழியில் நடந்து பனங் காட்டிற்குள் மறைந்து போனார்கள். அலங்காரி குத்திக் காட்டினாள்.

"பாத்தியாய்யா. அவங்க பேசுறத. நம்ம செம்பட்டையான் ஆளுவ போதாதாக்கும். நீ எதுக்காவ அப்பு மெட்ராஸ்ல இருந்து சின்னப் பயலுவள இறக்குமதி செய்யனும்."

"அய்யோ சித்தி. நான் சுடலைமாடன் விசேஷத்த வீடியோ படம் எடுக்கதுக்காவ கொண்டு வந்திருக்கேன். கோயில் கொடைக்காவ போட்ட பணம் மாதிரி பத்து மடங்கு சம்பாதிக்கப் போறேன். எங்கப்பன். இது தெரியாம முனங்குறாரு இவனுவ வேற புதுக்கதை கட்டி விடுறானுவ..."

"அப்போ காத்துக் கருப்பன் அடிச்சா. இவங்க கையை கட்டிக்கிட்டு நிப்பாங்களா.."

"அதெப்படி... நம்ம கோயிலுக்குள்ளேயே வந்து எவனும் வாலாட்டுனா. பின்னிப்பிடுவாங்க பின்னி. வேல தெரிஞ்சவங்க. ஒரே டிக்கட்டுல வீடியோ படத்துக்கு வீடியோ படம். அடிக்கு அடி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/194&oldid=1243738" இலிருந்து மீள்விக்கப்பட்டது