பக்கம்:சாமியாடிகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

193

சாமியாடிகள் 193

"இந்த பற்குணம் வெறும் வாய்ச்சவடால்காரன்தான். ஆனால் மெட்ராஸ்ல இருந்து ஊர்காரன அடிக்கதுக்கு ஆள் வந்திருக்குன்னு சட்டாம்பட்டி முழுதும் தண்டோரா போடப் போறான். இந்தத் தகராறுல கலந்துக்காத காரை வீட்டுக்காரங்களும், நமக்கு எதிரா திரளப் போறாங்க. நம்ம கோயில இழுத்து மூடப் போறாங்க."

"நான் மெட்ராஸ்காரங்கள அனுப்பி வைக்கவும் முடியாது. ஊர்க்காரன் கிட்ட சொல்லவும் முடியாது. ஏன்னா இந்தச் சமயத்துல எவனும் எவன் பேச்சையும் கேட்க மாட்டான். ஒரே குழப்பமாய் இருக்கு சித்தி. ஊர்க்காரனுவ ஒண்ணா திரண்டா நம்ம பயலுவளே ஒட்டம் பிடிப்பானுவ... என்ன செய்யலாம். ஒரு வழியும் தெரியலே."

“ஒனக்கு சுடலைமாட சாமி கொடையும் நடக்கணும். கரும்பட்டையானும் தல குனியணும். ஊர்க்காரனும் பேசப்படாது. இந்த மூனும் ஒரே சமயத்துல நடக்கணுமுன்னா நடக்கும். நடத்திக் காட்டுறதுக்கு நானாச்சு."

"எப்டி சித்தி..? எப்டி..?" "ஆனால் சித்தி சொல்லுறதை மட்டும் நீ கேக்கணும்" "நீ எது சொன்னாலும் கேக்கேன் சித்தி." "அதோ. சோளத் தட்டைக்குள்ள மறஞ்சுட்டாளே. கோலவடிவு, அவள. நீ கூட்டிட்டு ஒடனும்."

நடந்து கொண்டிருந்த துளசிங்கம் அப்படியே நின்றான். அதைக் கவனிக்காது நடந்த அலங்காரி சித்தியின் கையைப் பிடித்து, அவளையும் நிறுத்தினான். அவளையே சிறிது நேரம் ஆச்சரியமாய் பார்த்துவிட்டு சந்தேகம் கேட்டான்.

"உனக்குப் பைத்தியமா சித்தி..? குத்துலயும் கொலையுலயும் விடப் போற விவகாரத்தை எப்படி சிரிச்சுக்கிட்டே பேசுறே.?”

"ஒன்ன அந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு சித்தி விடுவனா..?"

f3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/195&oldid=1243739" இலிருந்து மீள்விக்கப்பட்டது