பக்கம்:சாமியாடிகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

சு. சமுத்திரம்

194 சு. சமுத்திரம்

"விடப் போறியே. அப்பவே. நீ இப்படிச் செய்யச் சொல்வேன்னு ஒரு சந்தேகம். ஆனால். இதுக்குமேல. என்னால முடியாது. சித்தி. கடலை குடைதான் முக்கியம்."

"சுடலைக்கு கொடை மட்டும் ஒன்னால நடத்த முடியுமோ..? ஊர்க்காரன் தான் விடுவானா..? அப்போ மட்டும் குத்து வெட்டு கொலை நடக்காதோ..?"

"சண்டையில சாகிறது வேற. சாகிறதுக்காவ சாகிறது வேற."

"ஒன்னைவிட சித்தி பத்து பதினஞ்சு வயது பெரியவள். ஆயிரம் சண்டையைப் பார்த்தவள். ஊர்ல ஒவ்வொருத்தனைப் பற்றியும் தெரிஞ்சவள். இவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம கெளரவத்த காப்பாத்த வேண்டியதில்ல. அதுக்கு லேசாண் வழி இருக்கு கோலவடிவை கூட்டிக்கிட்டு ஒடு. கரும்பட்டையான் கன்னத்துல கை வச்சுடுவான். காத்துக் கருப்பன் பொண்ண சரியா வைக்கத் தெரியலன்னு பழனிச்சாமியத் திட்டுவான். ஆக நம்ம கொடை பிரமாதமா நடக்கும்."

"நீ சொல்றது மாதிரி கரும்பட்டையான் பயலுவள, அதுவும் இந்த திருமலைப் பயல. அவமானப் படுத்துறதுக்கு இதைவிட நல்லவழி எதுவும் இல்ல. ஆனால் கோபத்துல அவங்க. அதாவது அந்தச் சமயத்துல ஏற்படுற கோபத்துல அரிவாள கிரிவாள எடுத்து."

"அதை அப்போ பார்த்துக்கலாம். ஊர்க்காரன் அந்த அளவுக்கு விடமாட்டான். பழனிச்சாமிக்கு துளசிங்கம் மருமகனாயிட்டான். ஊரு உலகத்துல நடக்கது மாதிரி ஒரு நாள் இல்லாட்டாலும் ஒரு நாளாவது ஒண்ணா சேருவாங்க. நாம ஏன் கெட்ட பேர் வாங்கணுமுன்னு ஒதுங்கிக்குவான்."

“சரி சித்தி, இவள் சம்மதிப்பாளா.."

"சம்மதிக்க வைக்கது. என் பொறுப்பு."

"சரி. இவளக் கூட்டிட்டுப் போய் அப்புறம் எங்க விடுறது."

"ஒன் சினிமாப் புத்திய காட்டிட்ட பாரு. நான் என்ன அவ்வளவு கல் நெஞ்சுக்காரியாடா. நானும் மனுஷிதாண்டா. கோலவடிவை நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/196&oldid=1243740" இலிருந்து மீள்விக்கப்பட்டது