பக்கம்:சாமியாடிகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

195

சாமியாடிகள் 195

கூட்டிக்கிட்டு ஒடிப்போற. ரிஜிஸ்தர் ஆபீஸ்ல அவளை கல்யாணம் செய்யுற, அப்புறம் நம்ம சுடலைமாடசாமி கொடைக்கு ரெண்டு பேருமா புருஷன் பொண்டாட்டியா வாரீய."

"கொடை நாளைக்கு ராத்திரி துவங்குதே."

"நாளைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமைதான் உச்சம். அதுக்கு வந்தா போதும்."

"இவள் சரியான நாட்டுப்புறம். இவளப்போய் கல்யாணம் செய்யுறதை நினைக்கவே...'

"கரும்பு தின்னக் கூலியாடா கேக்கே. கூலி. அவள் மாதிரி ஒரு குடும்பப் பெண் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். ஆனால் இப்பவே சொல்லிட்டேம்பா. அவள கல்யாணம் செய்யுறதா இருந்தா கூட்டிட்டுப் போ. இல்லாட்டா இப்பவ சொல்லிடு. அப்புறம் ஒன் பாடு. ஊர்க்காரன் பாடு. சுடல கோயில் மூடட்டும். செம்பட்டையான் தலை குனிஞ்க நடக்கட்டும். எனக்கென்ன. நேருக்கு நேராய் நெஞ்சை நிமுத்துறவளுக... எத்தனையோ பேர் இருக்காளுவ. ஆனால் கோலவடிவு கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்."

துளசிங்கம், மீண்டும் நின்றபடியே யோசித்தான். சித்தி சொல்வது ஒருவகையில் சரிதான். கோலவடிவு குடும்பப் பாங்கான பெண். நிசமான பெண். அவனுக்கு ஏத்த ஜோடி இல்லதான். ஆனால் எதையும் சோடிச்சுப் பேசத் தெரியாத அப்பாவி. வீட்ல பொண்டாட்டியா இருந்துட்டுப் போவட்டும். திருமலைப் பயலுக்கும் செருப்படி கொடுத்தது மர்திரி இருக்கும்.

அலங்காரி, துளசிங்கத்தின் நடைவேகத்தை வர்ணித்தாள்.

"எப்பாடா. நீ வேகமாய் நடக்கதைப் பாக்க சித்திக்கு எவ்வளவு தெம்பா இருக்கு தெரியுமா. அதோ பாரு. பனங்காட்டுக்குள்ள போன பற்குணம் திரும்பி நடக்கதை. நம்ம கிட்ட வம்பு பண்ணுறதுக்குன்னே வந்திருக்கானுவ பாதியிலயே. பேதில போற. பயலுவ. சரி. மெதுவா நடப்பா. சித்தியும் கூட நடக்கனுமுல்லா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/197&oldid=1243741" இலிருந்து மீள்விக்கப்பட்டது