பக்கம்:சாமியாடிகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

197

சாமியாடிகள் 197

நாளைக்கு ராத்திரிக்கு ஒன்னை கூட்டிட்டுப் போய் மறுநாள் காலையில ரிஜிஸ்தர் ஆபீஸ்ல தாலி கட்டுதான். அப்புறம் மாலையும் கழுத்துமாய் ஒங்கப்பா பழனிச்சாமி காலுல வந்து விழுவான். துளசிங்கம், பழனிச்சாமி அண்ணாச்சிக்கு மருமகனா ஆயிடுவான். நீ எலி டாக்டரு மருமகளா ஆயிடுவே. கோயில் கொடை தகராறும் தீந்துடும். ஒன்னைப் பிடிச்ச அக்னிராசா சனியனும் விலகிடும். என்ன சொல்லுதே. ரெண்டுல ஒன்னை இப்பவே சொல்லு. ஒனக்காவ நாங்க ரெண்டு பேரும் இங்க வந்துட்டோம். ஒங்க ஆட்கள் எங்களப் பார்த்துட்டா ரெண்டு கொல விழும். அதுக்கு முன்னால சொல்ல வேண்டியத சொல்லிடு. அத்த சொன்னதுக்கு சம்மதமா."

கோலவடிவு திகைத்துப் போனாள். திக்குமுக்காடினாள். இப்படிப்பட்ட யோசனையை அவள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் அவனை விட்டுவிட்டு, அக்னியை வலம் வரவும் மனம் இல்லை. ஆனாலும் இப்படியா. எம்மாடி நெனச்சுச் பார்க்கவே முடியலியே. இவருகூட நான் ஒடனுமா. இதைவிட செத்துடலாம். அப்பா துடிச்சிடுவாரு அம்மா செத்திடுவாள். அண்ணாச்சி குதிப்பான். அவங்க கிடக்கட்டும். எனக்கே இது சரியா தெரியலியே. எம்மாடி. அலங்காரி அத்தையோட யோசனைப் பாரு. யோசனை.

கோலவடிவு, பூணிக்குருவி மாதிரி தோன்றிய ஒரு சோளக் கதிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி நின்றாள். துளசிங்கம் உப்புக் குத்திக் கால்களில் நின்றபடி சோளத் தோட்டத்திற்கு வெளியே நோட்டம் விட்டான். அலங்காரி அடுக்கிக் கொண்டே போனாள்.

"ஒன் நிலம எனக்குப் புரியது கோலம். ஆனால் ஒரு பொண்ணு. எதிர்காலத்துக்காவ இந்தக் காலத்துலயே ஒரு முடிவு எடுத்தாகணும். ஊர்ல கொண்டான் கொடுத்தாங்க வருஷம் முழுசும் சண்ட போடுவான். அதுல நம்ம வாழ்க்கைய தொலச்சிடப்படாது. ஊர்ல நடக்க பாரதப் போருக்கு நீ அரவானாய் ஆயிடப்படாது. என்ன சொல்லுதே. ஆள் அரவம் கேட்குது. சரிடா. துளசி. வாடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/199&oldid=1243743" இலிருந்து மீள்விக்கப்பட்டது