பக்கம்:சாமியாடிகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

199

சாமியாடிகள் 199

கோலவடிவு இருதலைக் கொள்ளி எறும்பானாள். தலையைப் பிடித்துக் கொண்டாள். முகத்தை ஆட்டிக் கொண்டாள். தலையைப் பின்னால் வளைத்து, கண்ணிரைப் பின்புறமாகத் தெறிக்க விட்டாள். துளசிங்கம் நகர்வது போல் தெரிந்தது. அலங்காரி அத்தை அவனைப் பிடித்து இழுப்பது போல் தெரிந்தது. அய்யோ. போறாரே. என்னைவிட்டு போறாரே.

அலங்காரி நிற்பதையும் பொருட்படுத்தாமல், கோலவடிவு துளசிங்கம்மேல் விழுந்தாள். அவன் இரண்டு தோள்களிலும் கைகளைப் போட்டபடி தேம்பினாள். அந்தத் தோள்களைப் பற்றிய படியே ஏங்கி ஏங்கி அழுதாள். உன்னை விடமாட்டேன்' என்பதுபோல் அவன் கழுத்தைத் தன் கரங்களால் பின்னிக் கொண்டு அலை மோதினாள்.

அலங்காரி அவசர அவசரமாகப் புறப்பட்டாள்.

"அய்யய்யோ என் ஆட்ட கோவில் பக்கம் மரத்துல கட்டிப் போட்டத மறந்துட்டேன், பாருங்க. நிதானமாக வாங்க. நான் போறேன்."


22

ஊருக்கு வெளியே உள்ள முருகன் கோவில் முன்பக்கம். தங்கரளி மரங்கள், அந்தக் காலத்துப் பெண்கள் காதில் போடும் பாம்படங்களாக அவற்றில் காய்கள் தொங்கின. பூவரசமரம், பழுத்த இலையோடும், பச்சை இலையோடும் ஒலிபெருக்கி மாதிரியான பூக்களோடும் மின்னின. இவற்றிற்கு மத்தியில் உள்ள வாகை மரத்தின் அடிவாரத்தைச் சுற்றி, இரண்டடி உயரத்தில் சிமெண்ட் தளம் கட்டப்பட்டிருந்தது. வழிப்போக்கர்களும், வழியைத் தொலைத்தவர்களும் உட்காருவதற்காகச் சட்டாம்பட்டி ஊராட்சி மன்றம் தனது அக்கிரமங்களுக்கு பிராயச் சித்தமாக கட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/201&oldid=1243745" இலிருந்து மீள்விக்கப்பட்டது