பக்கம்:சாமியாடிகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

சு. சமுத்திரம்

200 சு. சமுத்திரம்

சிமெண்ட் திண்ணை. அதில், ரஞ்சிதம் உட்படப் பல பெண்கள் உட்கார்ந்து பீடி வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார்கள். சில பெண்கள் மரங்களில் அடிவாரங்களில் சாய்ந்தபடி கைகளை இயக்கினார்கள். இந்தக் கூட்டத்தில், ஊர் வம்பில் தலையிடாத 'காரை வீட்டுக்கார பெண்களும் இருந்தார்கள். அந்தக் காலத்தில் ஒலை போடாமல் ஒடு போட்டு வீடுகள் கட்டிய குடும்பம். எண்ணிக்கையோ இருபது. இருப்பதோ லட்சங்கள். இப்போது மாடி மேல் மாடி கட்டிடங்கள் உருவாகி விட்டாலும், காரை வீட்டுக்காரன் பட்டம் என்று இவர்களைத்தான் சேரும் என்று இவர்களே சொல்லிக் கொண்டார்கள். ஊரும் சும்மா ஒரு பேச்சுக்குப் பேசும்.

ஒருத்தி அலுப்புத் தீர முதுகை வளைத்தபடியே பேசினாள்.

"எப்பாடா. நம்ம ரஞ்சிதம் புண்ணியத்துல. நம்ம பொழப்பு நல்லாவே ஓடுது. குட்டாம்பட்டில இப்படி ஒரு கூட்டுறவு சங்கம் இருக்க தெரியாமப் போச்சு. பாரு. பழைய இலய தரல. எடையில குளோறுபிகேஷன் செய்யல. பீடியக் கழிக்கல. வாரத்துக்கு முப்பது ரூபா அதிகமா வரும்."

"ஏழா. இதுதான் சாக்குன்னு இலய மோசமா வெட்டாத துளை கொறவா வைக்காத."

"அது ஒன் புத்தி. ஆமா ரஞ்சிதம் நாம எப்போ கூட்டுறவு சங்கத்தை வைக்கிறது."

ரஞ்சிதம் பீடிகளைக் கையில் சுழலவிட்டபடியே, பேசியவளைப் பார்க்காமலே பதிலளித்தாள்.

"மொதல்ல. இந்த ஊருக்கு ரத்தக் கொதிப்பு மாதிரி வந்திருக்கிற கோவில் கொடை முடியட்டும். நம்ம கண்ணாடிக்காரர் ஏற்கனவே பல அதிகாரிங்ககிட்ட பேசிட்டு வாரார். ஒரு மாதத்துல முடிஞ்சுடும்." "இந்த பால்பாண்டி பீடிக்கடை போண்டியாகணும். அவன் பழையபடியும் மாட்டுத் தரகுக்குப் போகணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/202&oldid=1243746" இலிருந்து மீள்விக்கப்பட்டது