பக்கம்:சாமியாடிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

201

சாமியாடிகள் 201

'இப்போவாவது ஒற்றுமையோட அவசியத்தை புரிஞ்சுக் கிட்டிங்களா... சில பழமொழிகளோட அர்த்தம் அதன்படி நடக்கும்போதுதான் விஸ்வரூபமாய் தெரியும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்கிறது கோடான கோடி பேருக்குத் தெரியும். ஆனால் நமக்கு புரிஞ்சது மாதிரி எத்தன பேருக்குப் புரியும். நாம எல்லாரும் ஒருவர்னும், ஒருவரே எல்லாரும்னும் நினைக்கும்போது மனகல ஒரு தெம்புவருது பாருங்க. அது எந்த விலைக்கும் கிடைக்காது. இயற்கையான காத்து மாதிரி வெளிச்சம் மாதிரி. இந்த ஒற்றுமை உணர்வு இயற்கையா இருக்கது. மனுஷன்தான் இதை செயற்கையாக் கிட்டான்."

"பேசு ரஞ்சிதம், ஏன் பேச்ச நிறுத்திட்ட நீ பேசிக்கிட்டே இரு. ஒனக்கும் சேர்த்து நாங்க பீடி சுத்துறோம். சினிமாக் காரணுவளப் பத்திப் பேசிப் பேசியே எவ்வளவு நாளா வீணாக்கிட்டோம் பாரு. ஏன் பேசமாட்டக்க."

பேசியவள் பேசாதவளைப் பார்த்தாள். பிறகு எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தைப் பார்க்க அவள் தொலை தூரத்தைப் பார்த்தாள். அங்கே வாடாப்பூ வந்து கொண்டிருந்தாள். தலையிலே கஞ்சிக் கலயம். தோளிலே மண்வெட்டி. கையிலே கதிரறுவாள். அழுக்கடைந்த புடவை. புழுதிபட்ட தலைமுடி.

வாடாப்பூ, அவர்கள் பக்கம் வந்து நின்று, உதடுகளைக் கடித்தாள். முகத்தைத் துடைப்பது போல் கண்ணிரைத் துடைத்துக் கன்னங்களைக் கழுவிக் கொண்டாள். ரஞ்சிதம் எழுந்த போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். இதர பெண்களும் அவளைச் சுற்றி நின்று கொள்ள, ரஞ்சிதம் தழுதழுத்த குரலில் பேசினாள்.

"நீ நெசமாவே புரட்சிக்காரி வாடாப்பூ. எங்களுக்காவ அப்பாவி அப்பாவே பாவியாயிடும்படியாய் அவர்கிட்டே அடிபட்டிருக்கே. எங்களுக்காவ சிலுவ சுமந்திருக்கே. ஏசெண்டு எவ்வளவோ கெஞ்சியும் என் தோழிகள் இல்லாம சுத்தமாட்டேன்னு சொல்லிருக்கே. இதுக்காவ கத்தரிக்குப் பதிலா மண்வெட்டிய தூக்கிட்டே. ஒன் தோளுல தொங்குற மண்வெட்டியும், கையில இருக்கிற கதிரறுவாளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/203&oldid=1243748" இலிருந்து மீள்விக்கப்பட்டது