பக்கம்:சாமியாடிகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

207

சாமியாடிகள் 207

கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ராமசுப்பு, திருமலை, அருணாசலம் போன்றவர்கள் பறிமாறி முடித்துவிட்டு, தாங்களும் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள். பந்தியைக் கண்குளிரப் பார்த்து விட்டு, பழனிச்சாமி, தமது தேக்குக் கட்டிலில் உட்கார்ந்தார். எதிரே முற்றத்தில் குவியல் குவியலாய் கிடந்த வாழைக் குலைகளையும், வெற்றிலைக் கட்டுக்களையும், பூமாலைகளையும் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, லேசாகக் கண்மூடப் போனார்.

சுடலைக்குக் கொடை வெள்ளிக்கிழமை என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாலும், அது உச்ச நாள். இன்று, பதினொரு மணியளவில் மேளம் தட்டப்படும். ஒலிபெருக்கி பாட்டுப் பாடும். அதற்குள் எழுந்துவிடலாம் என்றுதான், பழனிச்சாமி படுக்கப் போனார். அதற்குள் வந்துட்டானுவ ராமசாமி, நாட்டு வக்கீல், மாடக்கண்ணு, கருப்பசாமி.

பழனிச்சாமியின் மனைவி பாக்கியம், கணவரின் காலடிப்பக்கம் உட்கார்ந்திருந்தாள். கோலவடிவு சாப்பிட்டாளோ, சாப்பிடலியோ, அம்மாவின் பக்கத்தில் அவளை ஒட்டியபடியே உட்கார்ந்து அம்மாவின் கால் பாதங்கள்மேல் தன் கால்களைப் பரப்பினாள். அப்பாவையே, அவர் பார்க்காத சமயமாகப் பார்த்தாள். எதிரே பனை நார் கட்டிலில் 'உஷ் என்ற அப்பாடா மூச்சோடு உட்கார்ந்த அண்ணன் திருமலையைக் குற்ற உணர்வோடு பார்த்தாள். அம்மாவின் பாதங்களை அழுத்தமாகப் பற்றினாள். தாய்க்காரி பாக்கியம், தற்செயலாகத்தான் சொன்னாள்.

"என்னழா வந்துட்டு ஒனக்கு.? ஏன் இப்டி ஒட்டுப் புல்லு மாதிரி ஒட்டுறே. ஒரே புழுக்கமா இருக்குல்ல. தள்ளி உட்காரேன்."

கோலவடிவு தள்ளி உட்காரவில்லை. அம்மாவைத் தள்ள போகிறவள்போல் நெருக்கியடித்தாள். பங்காளிகளின் பேச்சு சுவாரஸ்யத்தில், பாக்கியமும் அந்த பாச நெருக்கடியை மறந்து விட்டாள். கோலவடிவுதான், அங்கே நடக்கும் பேச்சைக் கேட்பதுபோல் பாசாங்கு செய்தபடி எங்கோ நினைத்தாள். இவங்கள விட்டுட்டு எப்டிப் போவேன். என் அம்மாவ விட்டுட்டு ஒரு மணி நேரத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/209&oldid=1243756" இலிருந்து மீள்விக்கப்பட்டது