பக்கம்:சாமியாடிகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

213

சாமியாடிகள் 213

ஒரு தடவ மாட்டிக்கிட்டா ஒரேயடியா மாட்டுனது மாதிரி. என்கிற எண்ணத்தோட போம்மா."

கோலவடிவு, அந்தக் கும்மிருட்டில் அலங்காரி அத்தையைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி உடம்பின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்தாள். பிறகு நின்றாள். நின்றபடியே பேசினாள்.

"எத்தே இவர சாக்கிரத்தையா இருக்கச் சொல்லுங்க. இவருக்கு ஏதாவது ஆயிட்டுன்னா நான் உயிர விட்டுடுவேன்னு சொல்லுங்க அத்தே."

சினிமா தோஷம் பிடித்த துளசிங்கம் பேசினான்.

"அப்படியே எனக்கு ஏதாவது ஆனாலும் கோலத்த சத்தம் போட்டு அழப்படாதுன்னு சொல்லுங்க சித்தி. ஏன்னா, அவள் அழுகைக்கான காரணம் ஊருக்கு தெரிஞ்க அவளுக்கும் எனக்கும் இருந்த பாசம் வெளில் வந்துடப்படாது, இன்னொருத்தன் வீட்ல வாழப் போறவள் பாரு..."

அலங்காரி, வாயை வாழைப்பழமாக்கி, நாக்கை ஊசியாக்கினாள்.

"கோலம். நீ பேசுற முறையும், ஒரு வகையில சரிதான். ஆனாலும் மண்சு கேட்க மாட்டக்கு. எங்க மச்சான் மவன் வெட்டுப்படப் போறது நிச்சயம். அதனால, இவனும் வெட்டுப் படுறதே வெட்டுப்படுறோம். வெட்டிட்டு படுவோமுன்னு இரும்புல பிச்சுவாக் கத்தியோட நிக்கான். இவன் ஒண்னு கொலையில் சாவான். இல்லாட்டா கொலை செய்துட்டு செயிலுல சாவான். ஏதோ ஒன்கூட ஒடிப் போனால் தப்பிப் பிழைப்பான்னு நெனச்சேன். அப்புறம் பழனிச்சாமி அண்ணாச்சிக்கு மருமவனாயிட்டா ஊரில் எந்தப் பயலும் இவன எதுவும் செய்ய முடியாதுன்னு இந்த அத்த ஆறுதல்பட்டேன். கடைசில, நீ அக்னிராசா கிட்ட அவஸ்தப்படனு முன்னும், இவன் அரிவாளால வெட்டுப் படனுமுன்னும் தலைவிதி இருந்தால், அதை யாரு மாத்த முடியும். நீ மனசு வச்சால் இவனையும் காப்பாத்தலாம். ஒன்னையும் காப்பாத்தலாம். ஊரையும் காப்பாத்தலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/215&oldid=1243765" இலிருந்து மீள்விக்கப்பட்டது