பக்கம்:சாமியாடிகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

சு. சமுத்திரம்

214 சு. சமுத்திரம்

கால்மணி நேரம் பதில் இல்லை. யாரும், யாருடனும் பேசவில்லை.

அலங்காரிக்கும், துளசிங்கத்திற்கும், முதுகைக் காட்டி நின்ற கோலவடிவு, சிறிது நேரம் அப்படியே நின்றாள். பிறகு வீடு இருந்த திசையை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். கும்பிட்டு முடித்ததும், அவர்களுக்கு முகத்தைக் கர்ட்டினாள். முந்தானையை இறுக்கி முடிந்துகிட்டு, ராட்சதப் பூச்சி மாதிரி நின்ற அந்த விக்கி வண்டியின் பின்னிருக்கையில், ஏறிக் கொள்வதற்காக செங்குத்தான உடம்பை, "உப்புக் குத்திக் காலில்" நின்றபடி, சாய்ந்தாள்.



25

கண்மூடித்தனமான இரவு.

அந்தக் குருட்டுத்தனமான இருட்டுப் பயங்கரப் பின்னணியில், பனங்காட்டை அடுத்த மாந்தோப்பிற்குள், ஏதோ ஒரு பூனை அசல் பச்சைக் குழந்தைபோல் அழுதது. விட்டுவிட்டும், விடாப்பிடியாகவும் அழுது புலம்பியது. இந்த அழுகைச்சத்தம் அரவம் கேட்டு, பனங்காட்டு நரி ஒன்று, ஊளையிட்டது. அதற்கு அருகிலேயே நாகப் பாம்போ, அல்லது சாரைப் பாம்போ எலிவளை ஒன்றிற்குள் பசியேக்கப் பார்வையுடன் ஊர்ந்து கொண்டிருந்தது. காதைப் பிய்க்கும்படி அடித்த காற்று, பேயிரைச்சலாய்க் கத்தி, அங்குள்ள அனைத்தையும் ஆட்டுவித்ததில், பனங்காய்கள் விழுந்தன. புளியம் பழங்கள் சிதறின. தென்னை ஒலைகள் சாய்ந்தன. காட்டுப் பூனை "விறுவு நாட்டுக் கோழி ஒன்றைக் கெளவிக் கொண்டு நர்த்தனமாடுவதுபோல் தாவியது.

அந்த இருட்டுக்குப் பழக்கப்பட்ட துளசிங்கம், விக்கி வண்டியை வேகமாகத்தான் ஒட்டினான். பழக்கப்பட்ட பாதை என்பதுடன், எவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/216&oldid=1243766" இலிருந்து மீள்விக்கப்பட்டது