பக்கம்:சாமியாடிகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

217

சாமியாடிகள் 217

சாயாமல் இருப்பதற்காக, அவன் எடுத்த போது, கோலம் தனது கையை அவன் வயிற்றில் இருந்து எடுக்கவில்லை. மாறாக, அந்தக் கைப்பிடியை வலுவாக்கினாள். பயத்திலே போட்ட பிடி, பாசப் பிடியானது. அவன், அவளைப் பார்க்காமலே வண்டியை ஒட்டியபடியே, ஒரு கையைப் பின்புறமாக வளைத்து, அவள் முகமென்று பிடறியைப் தடவி, பிடறி என்று முகத்தைப் பிடித்து, தன் முதுகிலே சாத்திக் கொண்டான். வண்டிப் போகப் போக, கோலவடிவின் குரலும் போயிற்று. பிடித்த பிடியைத் தளர்த்தாமல், போட்ட முகத்தை நிமிர்த்தாமல், கிடந்தாள். இன்னும் சொல்லப் போனால், அவள் பிடி இறுகியது; கிடுக்கிப்பிடி, துளசிங்கம் வண்டியைத் தென்மேற்குப் பக்கமாய்த் திருப்பியபடியே, அவளிடம் சந்தேகம் கேட்டான்.

"ஒனக்கு இப்போ பயம் போயிட்டுன்னு நினைக்கேன். பேசு கோலம். ஏன் பேசமாட்டக்கே. நீ பேசாட்டா என்னை ஒனக்கு பிடிக்கலன்னு அர்த்தம். ஏன் பேசமாட்டக்கே. ஏய். பேசுப்பா.”

"மாட்டேன். பேசுனா என் வாய் ஒம்ம கழுத்துல படும்."

"சரி. அப்போ முகத்தை தூக்கி வச்சுட்டுப் பேக. இப்போ பயமா இல்லியா. வீட்டுக்குப் போகனுமேன்னு எண்ணம் வரலியா. தப்பு செய்துட்டோமுன்னு தோணலியா. சொல்லு கோலம். ஒனக்கு கூச்சமா இருந்தால் முகத்த எடுத்துட்டுப் பேசு."

கோலவடிவு முகத்தை அவன் முதுகில் இருந்து எடுத்தாள். அதுவும் அவன் சொன்னதற்காக அப்படிச் செய்பவள்போல், முகத்தைப் பட்டும் படாமலும் எடுத்துவிட்டு, பட்டுப்பட்டென்று பதிலளித்தாள்.

"எனக்கே என்னைப் பத்தி நினைக்க ஆச்சரியமா. இருக்கு மச்சான். இப்போ பயம் இருந்த இடத்துல. படபடப்புத்தான் இருக்குது. சரியோ. தப்போ. வந்தாச்சு. தப்புல்ல. சரிதான். நீரு என்கூட இப்டி வராமல். ஊர்ல. லாந்துனால். நிச்சயம். ஒம்ம கொல பண்ணிப் புடுவானுவ. ஒம்ம காப்பாத்தறதுக்கு ஒரே வழி. இப்படி. ஒடி வாரதுதான். ஊரு உலகத்தில செய்யாததையா. செய்யுறோம். எத்தனபேரு. இப்டி. ஒடிப் போயிட்டு. அப்புறம் குடும்பத்துல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/219&oldid=1243770" இலிருந்து மீள்விக்கப்பட்டது