பக்கம்:சாமியாடிகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

சு. சமுத்திரம்

218 க. சமுத்திரம்

சேர்ந்துட்டாங்க.. கல்யாணம் ஆனதும். மாலையும் கழுத்துமாய் எங்கப்பாம்மா காலுல விழனும். ஒங்கப்பாம்மா காலுலவுந்தான். வெட்டுப் புடுவாவளா.. என்ன.. இப்போ, ஒம்ம பிளானு என்ன..."

கோலவடிவு, பயம் தெளிந்து, பலம் புரிந்து பேசுவதைப் பார்த்து, துளசிங்கமே அசந்து விட்டான். மீண்டும் தனது கையைச் சுற்றி வளைத்து, அவள் பிடரியைச் செல்லமாகத் தட்டித்தட்டி, அவள் முகம் தன் முதுகில் மோதும்படி செய்துகொண்டே பேசினான்.

"இப்போ. நேராய் நாம வெட்டாம்பட்டிக்குப் போறோம். எங்கம்மா பிறந்த ஊரு."

'அய்யய்யோ.... எங்க சொந்தக்காரங்களும் அங்க இருக்காங்களே."

"இருக்கட்டுமே. கல்யாணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போட அவங்களையும் கூப்புடலாம்."

"சரி. சொல்லப் போறத முழுசாப் சொல்லும்." "வெட்டாம்பட்டில எங்க பாட்டி வீடு இருக்குது. மாமன் மாருங்க. அவனவனுவ பெண்டாட்டிகள் ஊர்ல, வீடுகள கட்டிக்கிட்டு இருக்காங்க. பாட்டி மட்டும் தான் தனியா அந்த வீட்ல இருக்காள். இன்னைக்கு ராத்திரிக்கு. அங்கேதான் தங்கப் போறோம்."

"அப்புறம்.” "இதைக் கூடவா சொல்லிக் கொடுக்கணும்." "என்ன மச்சான் நீரு. அதுக்காவத்தானா. நான் ஒடிவாறேன்? சத்தியமாச் சொல்லுதேன். எனக்கு அந்த நெனப்பே இல்ல. ஒம்ம இப்டி கட்டிப் பிடிச்சிருக்கதுகூட நீருதான் தஞ்சமுன்னு சொல்லுறது மாதிரிதான். சரி. விஷயத்துக்கு வருவோம். ராத்திரி தங்குறோம். ராத்திரி போனதும்."

"காலையில நேரா கோணச் சத்திரம் போறோம். ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கிறோம். அங்கே இருந்து மாலையும் கழுத்துமா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/220&oldid=1243772" இலிருந்து மீள்விக்கப்பட்டது