பக்கம்:சாமியாடிகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

221

சாமியாடிகள் 221

"சும்மா தொணதொணக்காத பாட்டி. நான் இவள கொல செய்யவா கூட்டி வந்தேன். நாளைக்கே ரிஜிஸ்டர் கல்யாணம் செய்யப் போறேன். நாங்க விழுற முதல் காலு ஒன் காலுதான்."

"போலீஸ்காரன் என்ன துக்கிட்டுப் போக மாட்டானே.”

"ஒரு காதல் ஜோடியை சேர்த்த வச்சதுக்காவ போலீஸ்காரன் ஒன் கையைக் குலுக்குவான். சரி பெரிய வீட்ட திறந்துவிடு."

பாட்டியின் இரண்டு கரங்களையும், ஒத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டே, துளசிங்கம், ஊரில் பலர் அரிவாள் கம்புகளோடு, தன்னைத் தேடி அலைவதைச் சொன்னான். கோலவடிவை திருமணம் செய்வதன் மூலந்தான், தான், ஊர்க் கொலையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் விளக்கினான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கோலவடிவும் தெளிவான குரலில் திடமாகப் பேசினாள்.

"ஆமாம் பாட்டி. இவரு. என்னைக் கூட்டி வரல. நான்தான் இவரைக் கூட்டி வாரேன். இல்லாட்டா. இவரு ஊர்ல. உயிரோட இருக்க முடியாது. எனக்கு எங்க குடும்ப மானம் பெரிசுதான். ஆனால். அதைவிட பெரிசு இவரோட உயிரு. இவருக்கு மட்டும் உயிர்போற நெலம வராட்டால். இவரு. தலைகீழ நின்னாலும். இப்டி வரமாட்டேன். எங்கப்பாவ மாதிரி நானும். நியாயக்காரிதான் பாட்டி"

"எம்மாடி. இந்த வயசுல. என்ன பேச்சு பேசுற."

கிழவி பேசிவிட்டு, அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தாள். பிறகு, முணுமுணுத்தபடியே, வீட்டைத் திறந்துவிட்டாள். இருவரும் உள்ளே வந்தார்கள். துளசிங்கம், கதவை மூடப் போனான். கோலவடிவு மூடப்போன கதவை, இடையிலேயே கை கொடுத்து நிறுத்தியபடியே கேட்டாள்.

“எதுக்கு மச்சான் கதவ மூடுறியரு.?” "இதுக்கு மேல சொல்லணுமோ.. எனக்கு சொல்லத் தெரியல..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/223&oldid=1243776" இலிருந்து மீள்விக்கப்பட்டது