பக்கம்:சாமியாடிகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

223

சாமியாடிகள் 223

ஜொலித்தன. காளியம்மன் கோவில் கொண்டையில் தஞ்சை பெரிய கோவில் லிங்கம் அளவிற்கான லிங்க வடிவு மின்சார பல்புகள், சுடர்விட்டன. சுடலைமாடன் கோயிலில் கோபுர வடிவிலான மின்விளக்குகள், எதிர்ச்சுடரை வெளியிட்டன. இரண்டு கோவில் களிலும், பந்தல்களிலும், பந்தல்களுக்கு அப்பால் கம்புகளில் கட்டப்பட்ட 'வாழைத்தண்டு" விளக்குகள் நிலா வெளிச்ச இழப்பை ஈடுகட்டின. இத்தகைய இருட்டில் கள்ள நொங்கு வெட்டுபவர்களும், கள்ளத் தேங்காய்ப் பறிப்பவர்களுமான சின்னச் சின்னச் திருடர்கள். இந்த வெளிச்சத்தைப் பார்த்து "திரு திரு" என்று விழித்தார்களே தவிர திருட முடியவில்லை.

சுடலைமாடன் கோவிலில் 'மணமகளே மணமகளே வா" என்ற ரிக்கார்ட் பத்தாவது தடவையாக ஒலித்து, அங்கேயே கீறல் விழுந்த கிராம போனாகியது. காளியம்மன் கோயிலில், வெற்றிக்குமார் வில்லுப் பாட்டாளிக் குழுவினர், காளியம்மன் வரலாற்றை கையாட்டி, காலாட்டி குடந்தட்டி, சிங்கிதட்டி பாடினார்கள். அந்தக் குழுவின் குரல் ஒலி பெருக்கியில் ஏவி விடப்பட்டது. சுடலை மாடன் கோயிலில் ஒலி பெருக்கி பாட்டுச் சத்தத்துடன் "ஏய். ஆய். ஊய்." என்ற இடைச் செருகல் சத்தங்களும் ஒலித்தன. அங்கே சுமார் பத்துப் பதினைந்து சாமியாடிகள் தார்பாய்ந்த வேட்டியோடு, சந்தனம் அப்பிய மேனியோடு தீப்பந்தங்களுடனும், வெட்டரிவாள்களுடனும், தங்தங் என்று குதித்தார்கள். அவர்களின் சிம்மக் கர்ஜனைகள், காளியம்மன் கோவிலில் எதிரொலித்தன. காளியம்மன் சாமியாடித் தாத்தா, வாயைத் திறந்து திறந்து மூடி சுடலை கோவிலில் பீறிட்ட பதினைந்து சிம்ம கர்ஜனைகளையும், தானே, ஒருவராய்த் தக்காரும் மிக்காரும் இன்றி உருமுவதாக அனுமானித்துக் கொண்டு ஆடினார்.

சட்டாம்பட்டி மண்டல சார்பற்ற மக்கள் கடலை கோயிலில் இருந்து காளி கோயிலுக்கும், காளி கோயிலில் இருந்து சுடலை கோயிலுக்குமாய், நடமாடினார்கள். என்றாலும் காளியம்மன் கோவிலி ல்தான் அதிகக் கூட்டம். காத்துக் கருப்பன்களில் முக்கால்வாசி பேரும், காரைவீட்டான்களில் பாதிப்பேரும், கரும்பட்டையான்களுடன் கலந்து இருந்தார்கள். திடீரென்று சுடலை கோயிலில் ஆறு முழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/225&oldid=1243779" இலிருந்து மீள்விக்கப்பட்டது