பக்கம்:சாமியாடிகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

225

சாமியாடிகள் 225

சிவராமன் முன்னால் இருந்த மைக்கை வெடுக்கென பிடுங்கி, பழனிச்சாமி முன்னால் வைத்தான்.

"பேகங்க அய்யா."

"ஏய் மைக்க எடுப்பா. எல்லாத்துக்கும் சொல்லுதேன். நமக்கு கூட்டம் முக்கியமில்ல. கொள்கைதான் முக்கியம். கோவில் கொடை வெறும் பொழுது போக்கில்ல. நம்மோட மூதாதையர் நமக்கு விட்டுட்டுப் போன பழக்க வழக்கம். அதை மாற்ற முடியாது. இஷ்டப்பட்டவங்க இருங்க. இல்லாட்டா. போங்க யோவ் அடிப்பா. விகடம் கொஞ்சம் இரும்."

காசு வாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டியது போல், மேளக்காரர்கள் 'டங்கு டங்கு' என்று அடித்தார்கள்... நாதஸ்வரக்காரர்கள் ஓசை உச்சக்குரலில் ஓங்கின. ஊமைக்குழல் உறுமியது. தவுல் மேளம் இழுப்புப் போட்டது. பம்மை மேளம் பரபரத்தது. மேளம் அடித்தவர்கள், தத்தம் கழுத்தில் கிடக்கும் தங்கச் செயின்கள் துள்ளித் துள்ளி விழ, சதுராடினார்கள். ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதித்தபடியே, ஆடாமல் நின்ற சாமியாடித்தாத்தா முன்னால் வந்து, அடிஅடி என்று அடித்தார்கள். தாத்தாவும் ஆடினார் லேசாய். மெதுவாய். மேளக்காரர்களுக்கு ஈடுகொடுத்து, அவரால் ஆடமுடியவில்லை. நாளைக்கு ஆடனும். இப்படி ஆடினால் சின்னப்பய மவனுவ ஆடவிடமாட்டானுவ திருமலைப்பயல் அடிக்கவே வருவான். ஆனாலும் ஆடனும் மூச்ச இளைக்காம, உடம்பு நோகாம ஆடனும் எப்படி?

சாமியாடி தாத்தா திடீரென்று, கையை ஆட்டி, மேளத்தை நிறுத்திவிட்டு உத்திரவு சொல்லப் போனார். மைக் இல்லாமல் அவரால் உத்தரவு சொல்ல வராது. ஆகையால் மைக் மைக் என்றார்கள். அது ஏதோ மந்திரச் சொல் என்று மைக்காரன் சும்மா தலையைச் சொறிந்தபோது, தாத்தாவே மைக் முன்னால் ஒடிப்போய் உத்தரவு சொன்னார்.

"கவலைப்படாதிங்கடா என் மவனுவளா. கவலப்படாதிங்கடா. என் மவனுவளா. நம்ம குடும்பத்துல நாலு கல்யாணத்த இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/227&oldid=1243782" இலிருந்து மீள்விக்கப்பட்டது