பக்கம்:சாமியாடிகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

227

சாமியாடிகள் 227

மேளம் மீண்டும் முழங்கியது. தாத்தா, தலையை விரித்துப் போட்டு ஆடினார். குலவ குலவ' என்றார். இந்த மாதிரி வேண்டுதலின்போது குலவையிடும் பெண்களில் பாதிப்பேரே ஒப்புக்குக் குலவையிட்டார்கள். எப்போ கோலவடிவு வந்து உத்தரவு வாங்கி எப்போ நம்மள கூப்பிட்டு உத்தரவு வாங்கி. அதுக்குள்ள லைலாவும் அவள் காதலர்களும் மறஞ்சுடுவாங்க. இந்த கோலவடிவு இன்னுமா. தூங்குறாள்.

இதற்குள் பாக்கியமும், ராமசுப்புவும் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள். பழனிச்சாமியை பட்டும் படாமலும் கையாட்டி பக்கத்தில் வரும்படி கூப்பிட்டார்கள். அவரும் அதைக் கவனியாததுபோல் கவனித்துவிட்டு அந்தப் பக்கமாக வந்தார். பாக்கியம் சொல்வதற்கு முன்பே பழனிச்சாமி கேட்டார்.

"அவள கையோட கூட்டிட்டி வரவேண்டியதுதானே. சாமியாடி சின்னய்யா அறிவில்லாம கூப்புட்டுட்டாரு.. இன்னும் என்ன செய்யுறாள்."

"அவளைக் காணல. கண்டுபிடிக்க முடியல." "என்ன உளறுற." "வீட்ல எல்லா இடத்துலயும் பாத்துட்டேன். கட்டிலுக்கு அடில.. பாத்துட்டேன். முற்றத்துல பாத்துட்டேன். மாட்டுத் தொழுவத்துல பாத்துட்டேன். இந்தத் தெரு முழுசும் பாத்துட்டேன்."

"ஒரு வேள ஒதுங்க கிதுங்க." "அரைமணி நேரமாவா." "எனக்கு என்னமோ பயமா இருக்கு. பெத்த மனசு துடிக்குது." "என்ன பாக்கியம் சின்னப் பிள்ள மாதிரி. ஏணிப் படிக்கட்டு கீழ பாத்தியா.

"பாத்துட்டேன். குவியலாய் கிடந்த போர்வையைக்கூட உதறி பார்த்துட்டேன். மாடியக்கூட பார்த்துட்டேன். எங்க போயிருப்பா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/229&oldid=1243784" இலிருந்து மீள்விக்கப்பட்டது